நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களை சமாளிப்பதற்கு சீன அரசு உதவியளிப்பது உறுதி. சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவக் கமிஷனின் தலைவருமான ஹு சிந்தாவ் நேற்று சிச்சுவான் மாநிலத்தின் சிய் வாங் நகரில் பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டிய போது இவ்வாறு தெரிவித்தார்.
வெகு குறுகிய காலத்தில் நாம் உயிர்த் தப்பிய அனைவருக்கும் உதவியளிக்க வேண்டும் என்று படைவீரர்கள் மற்றும் தீ அணைக்கும் வீரர்களிடம் ஹு சிந்தாவ் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, இன்னலைச் சமாளித்து, தாயகத்தை புனரமைப்பதற்கு தொடர்புடைய பணியாளர்கள் உதவியளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.
|