நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாநிலத்திற்கு பல்வேறு வழிமுறைகள் மூலம் சர்வதேசச் சமூகம் தொடர்ந்து ஆறுதலை தெரிவித்து, நிவாரண உதவியை வழங்கியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஹு சின்தாவிடம், ஜிம்பாபுவே அரசுத் தலைவர் Mugabe, கனெடிய தலைமை அமைச்சர் Harper ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
தாஜிக்ஸ்தான் பிரதிநிதிகள் அவைத் தலைவர் Khairulloev, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் வூ பாங்கோவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மலேசியத், பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் எகிப்து தலைமை அமைச்சர்கள் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ்வுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தவிர, ஜப்பானிய பிரதிநிதிகள் அவைத் தலைவர் Yohei Kono, பிரிட்டன் நிதி அமைச்சர் Darling, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் El Baradei ஆகியோரும் போர்த்துக்கல் நாடாளுமன்றமும் சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ரஷியா, வட கொரியா, மங்கோலியா, ஜப்பான், துருக்கி, கனடா, ஸ்லோவேனியா, அல்பேனியா, ஈரான், கிர்கிஸ்தான், பிரான்ஸ், இத்தாலி, செர்பியா முதலிய நாட்டு அரசுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுக்கு உதவியை வழங்கியுள்ளன.
|