• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 09:49:33    
பல்வேறு துறையினரின் உதவி பற்றி

cri

சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனாவின் பல்வேறு துறையினர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொடர்ந்து உதவித் தொகையையும் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

நேற்று நண்பகல் 12 மணி வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள 123 மாபெரும் அரசு சார் தொழில் நிறுவனங்கள் வழங்கிய உதவித் தொகை 93 கோடியே 20 இலட்சம் யுவானை தாண்டியது. 10 கோடியே 30 இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் அவை வழங்கின.

நேற்றிரவு 11 மணி வரை, ஹாங்காங்கிலுள்ள நடுவண் அரசின் தொடர்ப்பு அலுவலகம் மூலம் ஹாங்காங்கின் பல்வேறு துறையினர் சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கிய உதவித் தொகை 40 கோடி ஹாங்காங் டாலரை தாண்டியுள்ளது.

திபெத் மரபுவழி புத்தமத துறவிகள், இந்நிலநடுக்கத்தில் அக்கறை செலுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு லாசா நகரின் துறவிகள் வழங்கிய உதவித் தொகை ஒரு இலட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. தவிர, திபெத்தில் பல்வேறு கோயில்கள் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தோர்களுக்காக இறைவேண்டல் நடத்தின.