• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 13:24:27    
மேற்கு மலையின் எட்டு புகழ்பெற்ற இடங்கள் (அ)

cri

பெய்ஜிங்கின் மேற்கு மலையிலான Cui wei, Lu shi, Ping po ஆகிய மூன்று மலைகளுக்கிடையிலான எட்டு இடங்கள், பெய்ஜிங்கில் மிகப் புகழ்பெற்ற காட்சி மண்டலமாகும். அவை, Chang an, Ling guang, Da bei, Xiang jie மற்றும் Zheng guo கோயில்கள், San Shan மற்றும் Long quan பெண் துறவி மடங்கள், Bao zhu குகை ஆகியவை ஆகும். அவை, மேற்கு மலையின் புகழ்பெற்ற எட்டு இடங்கள் என அழைக்கப்படுகின்றன.

Chang an கோயில்

இது, Cuiwei மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் உள்ளது. இது, மிங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்ட இக்கோயில், கிழக்கு நோக்கியதாய் மேற்கில் அமைந்துள்ளது. இரண்டு மண்டபங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முன்புறம், சாக்ய மண்டபமும், பின்புறம், பேரரசி மண்டபமும் உள்ளன.

Ling guang கோயில்

இது, புகழ்பெற்ற எட்டு இடங்களில் மிக முக்கிய கோயிலாகும். இது, தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. Cuiwei மலையின் கிழக்கில் இது உள்ளது. தெற்கிழக்கை நோக்கி அமைந்துள்ளது. அங்கு, சாக்யமுனியின் வெண்கலச் சிலை இருக்கிறது. அதில், ஐந்து முற்றங்கள் அடங்கும். தற்போது, Da bei, Yu chi, Ta yuan ஆகிய மூன்று முற்றங்கள் இன்னும் இருக்கின்றன. Da bei முற்றத்தின் தெற்கில், Guan yin மண்டபமும், வடக்கில், புத்தரை வணங்கும் மண்டபமும் இருக்கின்றன.

இம்மண்டபத்திற்குப் பின் பகுதியில், புத்தரின் பல் புத்தத் தூபி உள்ளது. அதன் உயரம், 51 மீட்டராகும். அதற்குள், 7 மாடிகள் இருக்கின்றன. புத்த மதத்தின் பண்டைய பதிவேட்டின்படி, புத்தரின் இரண்டு பற்கள், மனித குலத்திற்கு விட்டச் செல்லப்பட்டன. ஒரு பல், இலங்கையில் உள்ளது. மற்றது சீனாவில் இருக்கிறது.