சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், நேற்று பிற்பகல் 2.28 மணிக்கு, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் வான் தாக்குதலின் போது ஒலிக்கப்படும் சங்கோலி ஒலித்ததோடு, கார், தொடர் வண்டியின் ஒலிப்பான்களும் ஒலித்தன. Potala மாளிகையின் வளாகத்தில் பல்லாயிரகணக்கான பல்வேறு இன மக்கள் அஞ்சலி நடவடிக்கையை நடத்தினர்.
அதற்குப் பின், Jokhang கோயிலின் துறவிகள் இறை வேண்டல் நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 90 சிவப்பு அங்கி அணிந்த துறவிகள் கோயிலில் திருமறையை மனப்பாடமாக ஓதி இறை வேண்டல் மேற்கொண்டனர்.
சிச்சுவான் wenchuan நிலநடுக்கம் ஏற்ப்பட்ட பின், திபெத்தின் பல்வேறு துறைகளின் மக்கள் நிவாரண உதவி செய்து, நன்கொடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 19ம் நாள் ஒரு கோடியே 10 இலட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை திபெத்தின் பொது மக்கள் சிறப்பு தொடர் வண்டி மூலம் சிச்சுவான் மாநிலத்துக்கு அனுப்பியுள்ளனர். அரிசி, மாவு, சுத்திகரிக்கப்பட்ட நீர், திபெத் மருந்துகள் ஆகியவை அதில் அடங்கும்.
|