• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 16:02:00    
நிலநடுக்கத்தில் உயிரிழந்த சீனர்கள்

cri
அண்மையில், சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில், வட கொரியா, Peru, Equatorial Guinea, சிலி, லெபனான், கோட்டிவா ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் சீன தூதரகங்களுக்குச் சென்றனர்.

வட கொரியாவின் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்களும், தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இன்று வட கொரியாவிலுள்ள சீன தூதரகத்துக்குச் சென்று சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். பேரிடரைச் சமாளித்து, தாயகங்களை சீன மக்கள் சீரமைப்பவர் என்று அவர்கள் நம்பினர்.

மங்கோலிய நாடாளுமன்றத்தின் தலைவர் danzan lundeejantsan இன்று இந்நாட்டிலுள்ள சீன தூதரகத்துக்குச் சென்று சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தினார்.

Peru அரசுத் தலைவர் alan Garcia 19ம் நாள் காலை இந்நாட்டிலுள்ள சீன தூதரகத்துக்கு சென்றார். சீன அரசு விரைவான பயன் தரும் நிலநடுக்க இழப்பை நீக்கும் பணியை வெகுவாகப் பாராட்டினார். பேரிடரை விரைவாகச் சமாளிக்கவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தவும் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டார் என்று அஞ்சலி பதிவு புத்தகத்தில் கருத்துக்களை எழுதப் பின் அவர் தெரிவித்தார்.

தவிர, Peru நாட்டின் அரசின் நிறுவனங்கள், இராணுவ வசதிகல், காவற்துறை, வெளிநாடுகளிலுள்ள வெளியுறவு நிறுவனங்கள் ஆகியவை கொடிகள் அரை கம்பத்தில் பறக்க ஏற்றியன.

Equatorial Guinea தலைமையமைச்சர் Ricardo, சிலி நாடாளுமன்றத்தின் தலைவர் adolfo zaldivar பிரதிநிதித் தலைவர் juan bbstos, கோட்டிவ வெளியுறவு அமைச்சர் youssouf bakayoko, லெபனான் வெளியுறவு அமைச்சர் fawzi salloukh ஆகியோர் சீன தூதரகங்களுக்குச் சென்று சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.