கடந்த சில நாட்களாக, பல்வேறு வழிமுறைகளின் மூலம், சர்வதேசச் சமூகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனப் பிரதேசங்களுக்கு உதவி தொடர்ந்து வழங்கி வருகின்றது. UNICEF வழங்கிய முதலாவது தொகுதியான 16 டன் மீட்புதவி பொருட்கள், மே திங்கள் 19ம் நாளிரவில், chen du சென்றடைந்தன. அமெரிக்க அரசு, 10 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்டதவி பொருட்களை மீண்டும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இவை, சிறப்பு விமானத்தின் மூலம், நாளை, chen du சென்றடையும். சீனாவுக்கான மீட்புதவி மதிப்பை, 15 இலட்சம் யூரோவாக அதிகரிக்க வேண்டும் என்று ஜெர்மனி அரசு தீர்மானித்துள்ளது. பிரிட்டன் அரசும் 10 இலட்சம் pound மதிப்புள்ள மீட்புதவி பொருட்களை மீண்டும் வழங்கும். பாகிஸ்தான் அரசு, சீனாவுக்கு 10 ஆயிரம் கூடாரங்களை அவசரமாக வழங்கத் தீர்மானித்துள்ளது. தவிர, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, அயர்லாந்து முதலிய நாட்டு அரசுகள், கடந்த சில நாட்களில், சீனாவுக்கான மீட்டதவி தொகை மற்றும் பொருட்களை மீண்டும் வழங்கத் தீர்மானித்துள்ளது.
|