சீன செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த உளநல மீட்புதவிக்கான முதல் அணி, இன்று, பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, சி ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, அங்கு உளநல சிகிச்சை மேற்கொள்ளவுள்ளது நிலநடுக்கத்திற்குப் பின், அவர்கள், உள்ளூர் தொண்டர்களுக்கு உளநல சேவை அறிவுகளை வழங்குவர். இவ்வாறு, மேலும் அதிக மக்கள், நிலநடுக்கப் பேரழிவால் ஏற்பட்ட உளநல சிக்கலிருந்து மக்களை விரைவாக விடுவித்து, புதிய வாழ்க்கையைத் துவங்க ஆவன செய்வார்கள். 19 பேர் இடம்பெறும் உளநல மீட்புதவு அணி, சி ச்சுவான் mian yang நிலநடுக்கபகுதியில், 10 நாட்கள் தங்கும். இந்த அணியில் பெய்சிங் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மனைகள் மற்றும் அமைப்புகளின் உளநல நிபுணர்கள் அடங்குகின்றனர்.
|