• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 15:23:30    
உளநல மீட்புதவி அணி

cri
சீன செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த உளநல மீட்புதவிக்கான முதல் அணி, இன்று, பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, சி ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, அங்கு உளநல சிகிச்சை மேற்கொள்ளவுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின், அவர்கள், உள்ளூர் தொண்டர்களுக்கு உளநலச் சேவை அறிவுகளை வழங்குவர். இவ்வாறு, மேலும் அதிக மக்கள், நிலநடுக்கப் பேரழிவால் ஏற்பட்ட உளநலச் சிக்கலிருந்து மக்களை விரைவாக விடுவித்து, புதிய வாழ்க்கையைத் துவங்க ஆவன செய்வார்கள்.
19 பேர் இடம்பெறும் உளநல உதவி அணி, சி ச்சுவான் mian yang நிலநடுக்கப்பகுதியில், 10 நாட்கள் தங்கும். இந்த அணியில் பெய்சிங் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மனைகள் மற்றும் அமைப்புகளின் உளநல நிபுணர்கள் அடங்குகின்றனர்.
மே திங்கள் 18ம் நாள், உங்களுடன் இணைவது என்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உளநல உதவி நடவடிக்கை நிகழ்ச்சி, சீன வானொலி நிலையம் மற்றும் மத்திய மக்கள் தொலைக்காட்சியின் மூலம், முதல் முறையாக ஒலிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம், உள் நாட்டு வெளிநாட்டு உளநல மருத்துவ நிபுணர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆலோசனை ஆற்றுப்படுத்தல் முதலிய சிறப்பு உளநல மருத்துவ உதவிகளை வழங்குவர்.