சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியின் படி, ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழு இன்று பிற்பகல், விமானம் மூலம் சீனாவின் சிச்சவான் மாநிலத்தின் Chengdu நகரைச் சென்றடந்தது. விமானத்தில் நடமாடும் மருத்துவ மனையும், வாகனங்களும், நிவாரணப் பொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
இன்று பிற்பகல், இன்னொரு ரஷிய விமானம், 36 டன் மனித நேய மீட்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு, Chengdu நகரம் சென்றடைந்தது. அதில், 7டன் மருந்துகள் இருக்கின்றன.
தற்போதைய பேரிடர் நீக்கப் பணியின் நிலைமை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான் ஆகியய நாடுகளின் மருத்துவச் சிகிச்சைக் குழுகள், சீனாவுக்கு வந்து, மருத்துவ மீட்புதவிப்பணிக்கு உதவி புரிவதைச், சீன செஞ்சிலுவை சங்கம் ஏற்றுக் கொள்ளும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மருத்துவச் சிகிச்சையின் தேவைக்கு ஏற்ற படி, பல்வேறு நாடுகளின் செஞ் சிலுவைச் சங்கங்களுடன் நேருங்கிய தொடர்பு கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|