• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 19:09:57    
பசிப்பிக் மாக்கடல் படுக்கையில் கட்டியமைக்கப்படும் புதிய ஒளி வடம்

cri

2006ம் ஆண்டின் இறுதியில் சீன தைவான் பிரதேசத்தின் தெற்கு கடற்பரப்பில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தினால், கடல்படுக்கையிலுள்ள 14 ஒளி வடங்கள் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக, சீனப் பெரு நிலப்பகுதி, ஹாங்காங் மக்கௌ தைவான் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகியவற்றுக்குச் செல்லும் சர்வதேச தொலைத் தொடர்பு நெறிகளில் பெரும்பாலானவை நாசமடைந்தன. சர்வதேச இணையத்தின் சேவை தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சீன-அமெரிக்க பசிப்பிக் கடல்படுக்கை நேரடி ஒளி வடத்தைக் கட்டியமைப்பது பற்றி, அண்மையில் சீனாவின் மிகப் பெரிய இணையக் கூட்டு நிறுவனங்களான, சீன Netcom கூட்டு நிறுவனம், சீனச் தொலைத் தொடர்பு கூட்டு நிறுவனம், சீன Unicom கூட்டு நிறுவனம் ஆகியவை சீன தைவான், அமெரிக்கா, தென் கொரியா ஆகியவற்றின் கூட்டு நிறுவனங்களுடன் ஒரு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன. இந்தக் கட்டுமானம் நிறைவேறிய பின், தொடர்புடைய பிரதேசங்களின் சர்வதேச தொலைத் தொடர்பு ஆற்றல் பெரிதும் உயர்த்தப்படும். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இது மிகவும் தெளிவான தொலைகாட்சி வசதிகளை ஏற்படுத்தித் தரும்.

இசை 1

அக்டோபர் 22ம் நாள், சீன-அமெரிக்க பசிப்பிக் கடல்படுக்கையிலுள்ள நேரடி ஒளி வடப் திட்டப்பணியின் துவக்க விழா, சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரான சிங் தௌவில் நடைபெற்றது. இத்திட்டப்பணியின் சுருக்கப் பெயர் TPE என்பதாகும். முதல் கட்டத்தில் சீனப் பெருநிலப் பகுதியையும் அமெரிக்காவையும் இணைக்கும் ஒளி வடத்தின் நீளம் சுமார் 18 ஆயிரம் கிலோமீட்டராகும்.

புதிய ஒளி வடம் கட்டிமைக்கப்பட்டப் பின், தகவல்களை ஊடனுப்பும் வேகம் தற்போது இருப்பதை விட 31 மடங்கு அதிகரிக்கப்படும். வடிவமைப்பின் ஆற்றலின் படி, இந்த ஒளி வடம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 4 கோடி மக்கள் ஒரே நேரத்தில் தொலைபேசி மூலம்தொடர்பு கொள்ளலாம்.

முதல் கட்டத் திட்டப்பணி அடுத்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முன் நிறைவேறும் என்று மதிப்பிடப்படுகின்றது. 2008ம் ஆண்டு முழு உலகிலும் கிட்டத்தட்ட 500 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பர். சீன-அமெரிக்க பசிப்பிக் கடல்படுக்கை மூலமான நேரடி ஒளி வடம் ஒலிம்பிக்கின் போது தொலைத் தொடர்பின் பெரும் பான்மையான கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று சிங் தௌ நகரின் துணை தலைவர் wang xiu lin கூறினார். அவர் கூறியதாவது

உரை 2

பசிப்பிக் கடல்படுக்கையிலுள்ள சீன-அமெரிக்க நேரடி ஒளி வடம், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கும் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கும் தொலைத் தொடர்பு சேவை மற்றும் உத்தரவாதம் அளிக்கும். பசிப்பிக் பெருங்கடல் மூலம் தகவல் அனுப்பும் அளவை இது பெரிதும் உயர்த்தும் என்றார் அவர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்புக் கூட்டாளியான சீன Netcom கூட்டு நிறுவனம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு உயர் தர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனுப்பும் சேவை வழங்கும். இக்கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் zhao ji dong கூறியதாவது

உரை 3

சீன Netcom கூட்டு நிறுவனம் உள்ளிட்ட சீனச் தொலைத் தொடர்பு கூட்டு நிறுவனங்களின் பங்குடன், சர்வதேச கடல்படுக்கை ஒளி வடத்தின் பயன் முழுமையாக வெளிப்படுத்தப்படும் என்று நம்புகின்றேன். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தலைச்சிறந்த மிக பாதுகாப்பான சர்வதேச தொலைத் தொடர்பு சேவை வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கின்றோம் என்றார் அவர்.

சீனத் தகவல் தொழில் அமைச்சின் தொலைத் தொடர்பு நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் Wang JIAN WEN கூறியதாவது

உரை 4

கடந்த சில ஆண்டுகளான, சீனாவின் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு ஆகிய துறைகளின் சுறுசுறுப்பான வளர்ச்சியுடன், சீனாவின் சர்வதேசச் தொலைத் தொடர்பு தொழிலும் வேகமான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. இந்த ஒளி வடத்தின் கட்டுமானம், சீனாவின் சர்வேதச தொலைத் தொடர்பு வலைப்பின்னலை மேலும் மேம்படுத்துவதற்கு துணை புரியும். சீனாவின் சர்வதேசச் தொலைத் தொடர்பு ஆற்றலும் உயர்த்தப்படும்.

செயற்கை கோளுடன் ஒப்பிடுகையில், கடல் படுக்கை ஒளி வடம் பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. முதலில், கடல் நீர், வெளிப்புற மின்காந்த அலைகளின் தலையீட்டைத் தவிர்க்கலாம். அடுத்து, கடல் படுக்கை ஒளி வடம் மூலம் தகவல்களை அனுப்புவதில் நேரத்தடை பிரச்சினையில்லை. மூன்றாவது, கடல் படுக்கை ஒளி வடத்தின் பயன்பாட்டு ஆயுள் 25 ஆண்டுகளாகும். ஆனால், செயற்கை கோளில் பொருத்தப்பட்ட எரியாற்றல் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையே பயன்படுத்தப்படும்.

அமெரிக்க tyco கூட்டு நிறுவனம் இத்திட்டப்பணியின் கட்டுமான வணிகர்களில் ஒன்றாகும். இப் புதிய ஒளி வடம் சீன-அமெரிக்க பரிமாற்றத்தை விரைவுப்படுத்தும் என்று இக் கூட்டு நிறுவனத்தின் ஆசிய பசிப்பிக் வட்டார தலைமை இயக்குநர் Matulich Russell கூறினார். அவர் கூறியதாவது

உரை 5

சீன-அமெரிக்க பசிப்பிக் கடல் படுக்கை ஒளி வடத் திட்டப்பணி, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நேரடி தொலைத் தொடர்பு ஆற்றலை உருவாக்கி, தற்காலத்தின் ஒரு அற்புதமாக திகழ்கின்றது. மேலும், இது இரண்டு நாடுகளுக்கிடையில் புதிய பாலத்தை உருவாக்கி, இரு நாட்டு நெடுநோக்கு வர்த்தக உறவை விரைவுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை வலுப்படுத்தும். இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கு இது உறுதியான அடிப்படை இடும் என்றார் அவர்.

முன்னேறிய தொழில் நுட்பம், நியாயமான இணைய வலைப்பின்னல் வடிவமைப்பு ஆகியவற்றுடன் இந்த ஒளி வடத்தின் கட்டுமானத்துக்கான செலவு, பசிப்பிக் பெருங்கடலுக்கு ஊடாக சென்ற ஒளி வடத் தொகுதியில் மிகக் குறைவு. இது கட்டியமைக்கப்பட்டப் பின், சர்வதேச தொலைத் தொடர்பு செலவு குறைக்கப்படக் கூடும் என்று சீன Netcom கூட்டு நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவின் தலைவர் guan ruo qi கூறினார்.