• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 19:21:29    
சீன விசிறிகள்

cri

தமிழகத்தில் இப்போது கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும். வெப்பத்தை தணிக்க குளிர்பதனப் பெட்டியில் வைத்த நாகரீக கோலா வகையறாக்களை வாங்கி தாகம் தணித்துக்கொண்டிருப்போம். குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகமே சொர்க்கமாகிவிடும். வீட்டுக்குச் சென்றால் மின்விசிறியின் கீழே, விளக்கில் விழும் விட்டில் பூச்சிபோல் கிடப்போம். திடீரென மின் தடை வந்தால்தான் நமக்கு எல்லாமே மாறும். வீதியில் செல்லும் இளநீரும், தர்ப்பூசணியும், பதநீரும் திடீரென சுவையாகிவிடும். என்றைக்கோ சந்தையில் அழகாக இருக்கிறது என்பதற்காக வாங்கிய பனையோலை விசிறியை, கைகள் நாடும்.
வீட்டில் விசிறி இருக்கிறதா? இருந்தால் மின்விசிறியை சிறிது நேரம் நிறுத்திவிட்டு, பனையோலையோ, பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியோ, அல்லது காகிதமோ, ஏதோ ஒன்றால் செய்யப்பட்ட விசிறியை வீசிக்கொண்டே இன்றைய நிகழ்ச்சியை கேளுங்கள்.
விசிறி என்பது வெப்பத்தை விலக்கி, துரத்தி, குளுமையாக இருக்க மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த கருவி எனலாம். கோடைக்கால காற்று மிகவும் சுகமானது. ஆனால் கட்டிடங்களே காடாக மாறிய இன்றைய நகர வாழ்க்கையில் மெல்லிய காற்றை சுகிக்கும் வாய்ப்புகள் அருகிக்கொண்டிருக்கின்றன. எனவே, கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா என்று பாடிக்கொண்டு, கையிலுள்ள விசிறியால நாமே காற்றை வீசிக்கொள்வது, நலம். இதைத்தான் நம் பாட்டன் பூட்டன் காலத்தில் செய்தார்கள். இன்றைக்கும் கிராமங்களில் விசிறிகள் பரவலான பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. கிராமங்களில் குச்சி வீடோ, ஓட்டு வீடோ பனையோலை விசிறிகள் இறவானத்தில் சொருகப்பட்டிருப்பதை நாம் காணமுடியும்.
நம்மை போலத்தான் உலகிலுள்ள மக்களும். மின்விசிறிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், விசிறிகளைத்தான் வீசிக்கொண்டிருந்தனர். சீனாவில் மட்டும் என்னவோ பண்டைய காலத்திலிருந்தே இந்த விசிறிகளைக் கூட நாட்டின் பண்பாட்டு மணம் கமழும், கலையம்சம் கொண்ட ஒரு அடையாளப் பொருளாகவும் மக்கள் கருதினர். சீனர்கள் விசிறிகளை அன்றாட பயன்பாட்டு பொருளாக காற்று வீசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தவில்லை. சீனாவின் தொழிற்கலையின் சாரமாக, சீனப் பண்பாட்டுக் கலையின் செறிவாக அமைந்த விசிறிகளின் பல்வகை பாணிகளே அதற்கு சான்று.
3000 ஆண்டுகளுக்கு முன்பேயே, மூங்கில் விசிறி, பட்டு விசிறி, காகித விசிறி என பல்வகை விசிறிகளை சீனா தன்னகத்தே கொண்டிருந்தது. இவற்றில் பல விசிறிகள் சூரியகாந்திப்பூ, ப்ளம் பழப்பூ முதலிய பூக்களின் வடிவத்தில் அமைந்திருந்தன.
சரி சீனாவின் பல்வகை விசிறிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இறகு விசிறிகள்: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஷாங்ச்சோ (Shang zhou) வம்சக்காலத்தில் தோன்றியவை இறகுகளால் செய்யப்பட்ட விசிறிகள். விசிறிகளில் பயன்படுத்தப்பட்ட இறகுகள், கறுப்பு அல்லது வெண்ணிற வாத்தின் வால், ஆந்தையின் இறக்கை, மயிலின் தோகை, கொக்குகளின் வால் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டன. இந்த விசிறியை தயாரிப்பதில் பல கட்டங்கள் உண்டு. தேடுதல், தெரிவு செய்தல், துடைத்தல், கழுவுதல், சீர்படுத்துதல், செப்பனிடுதல், தைத்தல், பொருத்துதல் மற்றும் அலங்கரித்தல் போன்றவை. இந்த இறகு வசிறிகளை தயாரிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது, விசிறியின் இரு பக்கங்களிலும் பொருத்தமான இறகுகளை வரிசைப்படுத்தல் ஆகும். ஒரே பறவையின் இருபக்க இறக்கைகளிலிருந்தும் பிடுங்கிய இறகுகளை, விசிறியின் இரு பக்கங்களிலும் அழகாக பொருத்தினால், விசிறி பார்க்க எடுப்பாக தோன்றும்.