• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 09:29:22    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: அன்பு நேயர்களே, சிச்சுவான் மாநிலத்திலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர், காயமுற்றோர், பாதிக்கப்ப்ட்டோர் ஆகியோருக்கான உங்கள் ஆறுதலையும், அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சலூடாக எம்முடன் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எம் இதயத்தின் ஆழத்திலிருந்தான நன்றிகளை, நெகிழ்வோடு கூறிக்கொள்கிறோம்.

க்ளீட்டஸ்: ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் போது, இறக்குமதி உணவுகளின், பரிசோதனை, கண்காணிப்பு ஆகியவை வலுப்படுத்தப்படும் என்பதை சீன வானொலியின் செய்திகளின் மூலம் அறிந்தேன். தரக்குறைவான உணவுப்பொருட்கள் உறுதியா திருப்பி அனுப்பபடும் என்பதையும் அறிந்தபோது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனா அளிக்கும் முக்கியத்துவமும், கவனமும் புரிந்தது. மனதார பாராட்டுகிறேன்.
கலை: சீன இசை நிகழ்ச்சி குறித்து, நாமகிரிப்பேட்டை கவித்துளி. சக்தீஸ்வரன் எழுதிய கடிதம். திலகவதி அவர்கள் வழங்கிய சீன இசை நிகழ்ச்சியை கேட்டேன். சிறு குழந்தைகள் பாடிய சீன நாட்டுப்புற பாடல்களை ஒலிபரப்பினார். சிறப்பான பாடல்களை அன்றைய நிகழ்ச்சியில் அழகாக தொகுத்தளித் திலகவதிக்கு என் பாராட்டுக்கள்.
க்ளீட்டஸ்: காத்தான்குடி எம். ஐ. எஃப். இஃப்திகா எழுதிய கடிதம். கடந்த ஒராண்டுக்கும் மேலாக சீன வானொலியை கேட்டு வருகிறேன். தாவோர் இனத்தை பற்றி உங்களது தமிழொலி இதழின் மூலம் அறிந்துகொண்டேன். மாணவர்கள் என்ற முறையில் இத்தகவல்களை அறிந்துகொள்வதில் எமக்கு மகிழ்ச்சி. எம்மிடையே உள்ள சில மாணவர்கள் வெளிநாட்டுக்கு கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அது உங்கள் வானொலிக்கு மட்டும்தான். நாங்கள் விரும்பும், எங்களுக்கு உதவும் நல்ல நிகழ்ச்சிகளை தருவதற்கு நன்றி.

கலை: மாணவ பருவத்திலேயே எமது நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்கும் நேயர்கள் இருக்கிறார்கள் என்பது எமக்கு பெருமையாகும். கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
அடுத்து, அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி குருனிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். கொள்ளைநோய் பற்றிய நிகழ்ச்சியை கேட்டேன். ஆந்திராக்ஸ் போல சில நுண்ணுயிரிகள் உயிரியல் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறு குறித்த தகவல்களும் இடம்பெற்றன. எதையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டுமே ஒழிய, அழிவுப்பூர்வமாக பயன்படுத்தக்கூடாது.
கலை: திருநெல்வேலி. கடையாலுருட்டி நேயர் எம்.பிச்சைமணி எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் கொசோவோ சுதந்திரம் பற்றி பல செய்திகளை கேட்டறிந்தேன். பல நாடுகள் கொசோவோவின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளதகவும், அங்கே 80 விழுக்காட்டு இளைஞர்கள் வேலையின்றி இருப்பதாகவும் தெரிந்துகொண்டேன்.
மின்னஞ்சல் பகுதி


……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
சீனாவின் சிசுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் என்பதையும், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிந்து எல்லையில்லாத கவலை அடைந்தேன். இந்த இயற்கைச் சீற்றத்தில்
உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதுபோன்ற இயற்கைச் சீற்ற பேரிடர்களின் விளைவுகளை திறம்பட கையாண்டு, அவற்றை வெற்றிகொண்ட அனுபவம் சீனாவுக்கு உண்டு. எனவே, மனதைரியத்துடன் இந்த இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொண்டு, விரைவில் இயல்பு நிலைக்கு சீனா திரும்ப வேண்டும் என விரும்புகின்றேன்.

……பேளுக்குறிச்சி க செந்தில்......
சீனாவில் ந‌ட‌ந்த நில‌ந‌டுக்கம் ப‌ற்றி கேட்டு மிக‌வும் துய‌ரம் அடைந்தேன். உயிரிழ‌ந்த குடும்ப‌த்த‌ர்க‌ளுக்கு எனது ஆழ்ந்த‌ இர‌ங்க‌லைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்த‌வ‌ர்கள் விரைவில் குணம் அடைய‌ ஆண்ட‌வனை வேண்டுகிறேன். 13.05.08 அன்று ச‌ன்நியூஸ் தொலைக் காட்சியில் திருமதி க‌லைய‌ரசி அவ‌ர்க‌ளின் பேட்டியை ஒலிப்ப‌ர‌ப்பு செய்தார்க‌ள் .
…….பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்…….
சீனாவில் பத்துக்கும் மேலான மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சீன பொதுத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பலரின் உயிரிழப்பு, வீடுகள் நாசமடைந்த சம்பவங்கள் அப்பப்பா... ... என்ன ஒரு கொடுமை. சீன தலைமை அமைச்சரின் தலைமையில் சீனாவின் பேரிடர் நீக்க ஆணையத்தின் துரித நடவடிக்கைகள், மக்களை காப்பாற்றுவதே முதன்மை என்ற சீனத் தலைமயமைச்சரின் கோரிக்கை ஆகியவற்றை அறிந்தேன். பல் வேறு நாடுகள் இவ்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்தி அளித்தும், உதவிகள் செய்துமுள்ளது வரவேற்க்கத்தக்கது.

…..அமெரிக்கா ஆல்பர்ட்……
நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை
கேட்டு உள்ளம் பதறியவனாக இருக்கிறேன்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இடிபாடுகளில் சிக்கிச் சிகிச்சை பெறுவோர் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல‌ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
……திருச்சி பரத்வாஜ்……
சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 15000 கும் மேற்பட்ட மக்கள் இறந்த செய்தி கேட்டு மீளா துயரில் ஆழ்ந்தேன். நிலநடுக்கத்தில் இறந்த மக்களின் குடும்பத்தினருக்கும், சீன மக்களுக்கும், சீன அரசுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
......மதுரை அண்ணாநகர் N.இராமசாமி......
வங்கக் கடலில் நர்கீஸ் என்ற புயலின் கோரதாண்டவத்தால் மியான்மரில் பெருந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நெஞ்சத்தை உலுக்கிய நர்கீஸ் புயலின் கோரதண்டவத்தால் மேலும் பலர் இறக்கும் அபயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா இரண்டு போர் கப்பலை அனுப்பி நிவரணப் பொருட்களை வழக்கியுள்ளது. சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தாய்லாந்து மனிதநேய உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளமை பாராட்டுக்குரியது.
.......காளியப்பம்பாளைனயம் க.ராகம் பழனியயப்பன்.......
ஒலிம்பிக் மலையேற்ற குழு 8844.33 மீட்டர் உயர ஜொல்மா லுங்மா சிகரத்தை ஏறி ஒலிம்பிக் தீபத்தை அங்கே ஏற்றினர். அங்கு சீனக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தை ஜொல்லுங்மா சிகரத்தி நடத்தி வெற்றிகொண்ட மலையேற்ற குழுவிற்க்கு என் பாராட்டுக்கள்.