இன்று பிற்பகல் 2 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில் மொத்தம் 1172.7 கோடி யுவானை ஒதுக்கியுள்ளன. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இதை அறிவித்தது. இன்று நண்பகல் 12 மணி வரை, வென் சுவான் நிலநடுக்கத்தால், சி ச்சுவான், கான் சூ, ஷான் சி, சுங் சிங், யுன் நான், ஹு பெய், ஹெர் நான், குய் சோ, ஹு நான் ஆகிய 9 மாநகரம் மற்றும் மாநிலங்களில் 34 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்தனர். 2.4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். நேற்று நள்ளிரவு 12 மணி வரை, மீட்புதவிப் பணியாளர்கள் மொத்தம் 3.6 இலட்சம் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி பாதுகாப்பாக குடியமர்த்தியுள்ளனர் என்று தெரிய வருகின்றது. இன்று பிற்பகல் 1 மணி வரை, சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மொத்தம் 1390 கோடி யுவான் மதிப்புள்ள நிதி மற்றும் பொருட்களை வழங்கியுள்ளன. இதில் நன்கொடைத் தொகை 1250 கோடியைத் தாண்டியுள்ளது,
|