• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 18:22:12    
சீன அரசு மற்றும் மக்களின் நன்றி

cri
சீன சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சர்வதேச சமூகம் வழங்கிய ஆறுதலும் உதவியும், பொருள் ரீதியான உதவி மட்டுமல்ல, எழுச்சி ரீதியான ஊக்கமாகும். இது குறித்து, சீன அரசும் மக்களும் உளமார நன்றி தெரிவிக்கின்றனர். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியதாவது
சிக்கல்களின் போது மக்களின் அன்பு உணரப்படலாம். இந்த ஆறுதல்களும் உதவிகளும் பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் மக்களின், சீன மக்களுக்கான நட்புறவையும் மாபெரும் மனித நேய எழுச்சியையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிலைமையில், சீன மக்கள் ஒன்றுபட்டு பாடுபட்டு, பேரிடர் நீக்கப் பணியில் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்.
இதுவரை, 166 நாடுகளும் 30க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகளும் சீனாவுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளன. சீனாவிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் தூதரகங்களிலும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதி அலுவலகங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஜப்பான், ரஷியா, தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சீனாவுக்கு மீட்புதவிக் குழுகளை அனுப்பியுள்ளன. மேலும், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு மருத்துவ அணிகளை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.