நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம்
cri
சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொருள் விநியோகத்துக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் சீன அரசு முழு மூச்சுடன் உத்தரவாதம் செய்து வருகின்றது. இன்று 12 மணி வரையான நிலைமையின் படி, சி ச்சுவான் மாநிலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் செய்தித் தொடர்பு நிலைமை சீராக்கப்பட்டுள்ளது. உப உணவுப் பொருட்களின் விலை நிதானமாக இருந்தது. சி ச்சுவான், சுங் சிங், கான் சூ, ஷான் சி ஆகிய பிரதேசங்களில் முக்கிய மின் அனுப்பு வலைப்பின்னல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில் மொத்தம் 1172.7 கோடி யுவானை ஒதுக்கியுள்ளன. இன்று பிற்பகல் 1 மணி வரை, சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மொத்தம் 1390 கோடி யுவான் மதிப்புள்ள நிதி மற்றும் பொருட்களை வழங்கியுள்ளன. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இதை அறிவித்தது.
|
|