• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 18:16:49    
நிலநடுக்கத்தால் காயமுற்றோருக்கான சிகிச்சை

cri

மே 19ம் நாள் மாலை, 60சிறப்பு மருத்துவர்களின் கவனிப்புடன், சிச்சுவான் மாநில வென்ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமுற்ற 208 பேரை கொண்ட ஒரு சிறப்பு தொடர் வண்டி சுங்சிங் மாநகரின் தொடர் வண்டி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காயமுற்றோரை, இருப்புப்பாதை மூலம் சிச்சுவான் மாநிலத்துக்கு அப்பாலுள்ள மாநிலங்கள் மற்றும் மாநகரங்களுக்கு பெருமளவில் அனுப்பி, தொடர்ந்து சிகிச்சை அளிப்பது இந்நிலநடுக்கத்துக்கு பினகு இதுவே முதன்முறையாகும்.

இச்சிறப்பு தொடர் வண்டியிலான காயமுற்றோர் பலர் நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான மியான் யாங் நகரை சேர்ந்தவர்களாவர். இந்நகரிலுள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் ஏராளமான கடுங்காயமுற்றார் அனுமதிக்கப்பட்டு, நிரம்பி வழிந்தது. எனவே, இந்நிலைமையில், 18ம் நாள் முதல், மியான் யாங் மற்றும் சியாங் யூ நகரங்கள், An மாவட்டம் ஆகிய பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மருத்துவ மனைகளிலான 2100 காயமுற்றோர் சுங்சிங் மாநகருக்கு அனுப்பப்பட்டு வகுகின்றனர்.

காயமுற்றோரை பாதுகாப்பாக சுங்சிங்கிற்கு கொண்டு செல்லும் வகையில், உள்ளூர் இருப்புப் பாதை வாரியம், காயமுற்றோரை அனுப்பும் தொடர் வண்டிக்கு முழு அளவில் நச்சு நீக்கி தாய்மை செய்ததோடு, தொடர் வண்டியில் இன்றியமையாத மருத்துவ முதலுதவி வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இத்தொடர் வண்டியிலான அனைத்து பணியாளர்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளனர். சிறப்பு மருத்துவர்களை தவிர, காயமுற்றோரின் குடும்பத்தினரில் ஒருவர், காயமுற்றோருடன் சேர்ந்து பயணிப்பார்.

தொடர் வண்டி சுங்சிங்கை சென்றைடைவதற்கு முன்பேயே, பல நூறு மருத்துவஊழியர்களும், 208 அவசர மருத்துவ வாகனங்களும் வெகு நேரமாக தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தன. காயமுற்ற ஒரு நபருக்கு, ஒரு மருத்துவ வாகனம் என்ற வழிமுறையின் மூலம், காயமுற்றோர் சுங்சிங்கின் பல்வேறு பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவஊழியர்களில் ஒருவரான சுங்சிங் 6வது மக்கள் மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் Li Xuechun கூறியதாவது:

இத்தொடர் வண்டியிலான மருத்துவர்கள் காயமுற்றோரை நன்றாக கவனித்துக்கொள்வது உறுதி. தற்போது, எங்களை பொறுத்த வரை, முதலில் தொற்று நோய் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் காயமுற்றோரை சோதனை செய்வோம். அடுத்தபடியாக, காயமுற்றோரை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பவோம். எங்களது மருத்துவ மனை இவ்ற்றுக்கான ஆயத்தப் பணியை செவ்வனே செய்துள்ளது என்று அவர் கூறினார்.

சுங்சிங் மாநகரின் பல்வேறு பெரிய மருத்துவ மனைகளும் காயமுற்ற அனைவருக்கும் நபருக்கு ஒரு மருத்துவக்குழுவை அமர்த்தின. மருத்துவர், செவிலியர், தொண்டர் ஆகியோர் இம்மருத்துவக்குழுவில் இடம்பெறுகின்றனர் காயமுற்றோர் மருத்துவ மனையை சென்றடைந்த பின், காப்பாற்று பணி உடனடியாக சிகிச்சைப்பணி மேற்கொள்ளப்படுகின்றது என்று Li Xuechun விளக்கினார். இந்தத் தொகுதி காயமுற்றோர்கள் சென்றடைந்த பிறகு சில மணி நேரங்களில், முதுகெலும்பின் குழுத்துப்பகுதியில் எலும்பு முறிந்த 5 கடுங்காயமுற்றோருக்கு அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடு செவ்வனே செய்யப்பட்டது. அன்றிரவு, மருத்துவர்கள் இந்த 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் என்று சுங்சின் முதலாவது மருத்துவ மனையின் தலைவர் Yang Qingjun தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

கடுங்காயமுற்ற அந்த 5 பேரின் உடலில் பல பகுதிகளில் எலுப்பு முறிவுகள் ஏறபட்டிருந்தன. இது தவிர, வேறுகாயங்களும் இருந்தன. சோதனை மூலம், நாங்கள் அந்த 5 பேருக்கும் விபரமான சிகிச்சை திட்டங்களை வகுத்துள்ளோம். 20ம் நாள் காலை, முதலாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
தற்போது, சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த வந்த காயமுற்றோர் சுங்சிங் மாநகரின் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். காயமுற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்புடன், சுங்சிங்கிலுள்ள ஏறக்குறைய 100 குடியிருப்பு மருத்துவ நிலையங்கள் காயமுற்றோரை காப்பாற்ற உரிய முன்னேற்பாடுகளை செவ்வனே செய்துள்ளன. தவிரவும், எப்போதும் சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த நிலநடுக்கத்தில் காயமுற்றோரை காப்பாற்றி சிகிச்சையளிக்கும் வகையில், சுங்சிங்கில் தலைசிறந்த மருத்துவ மனையில் 5000 படுக்கைகளுக்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது என்று சுங்சிங் மாநகர சுகாதார ஆணையத்தின் தலைவர் Qu Qian தெரிவித்தார்.

தற்போது, சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காயமுற்ற குறைந்தது 20ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்ட தேவைப்படுகின்றனர். 20ம் மற்றும் 21ம் நாட்களில், மீட்புதவிப் பணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 10 தொடர் வண்டிகள் காயமுற்றோரை சுமந்து சிச்சுவான் மாநிலத்தை சென்றடையும் என்று தெரிய வருகின்றது.