• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 16:25:15    
பூதவுடல்களைக் கையாளும் முறை

cri

அண்மையில், மே 12ம் நாள் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் பூதவுடல்களைக் கையாளும் முறை பற்றிய முன்மொழிவுகளை, சீனப் பொதுத் துறை அமைச்சகம், பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவை கூட்டாக வகுத்துள்ளன.

 

தொடர்புடைய முன்மொழிவுகளின் படி, அடையாள அட்டையைக் கண்ட அல்லது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையாளம் கண்ட பூதவுடல்கள் விரைவில் தகனம் அல்லது அடக்கம் செய்யப்படும். அடையாளம் கண்டுகொள்ள முடியாத பூதவுடல்களின் படம், மரபணு பதிவு முதலிய பல்வகை தகவல்களை, பொது பாதுகாப்பு அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும், பதிவு செய்யும். பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் இத்தகவல்களை பாதுகாத்து, சோதனை செய்யும். இதற்கு பின், பூதவுடல்கள் விரைவில் தகனம் அல்லது அடக்கம் செய்யப்படும்.

 

பூதவுடல்கள் அழுகுவாதல் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில், பூதவுடல்கள் அடையாளம் காணப்பட்ட பின், தொடர்புடைய பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். பூதவுடல்களைக் கையாளும் போது, தொடர்புடைய விதிகளை கண்டிப்பான முறையில் பின்பற்றி, உயிரிழந்தோரின் கௌரவத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.