சீனத் துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் நேற்று பிற்பகல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஷான் சிய் மாநிலத்தைச் சென்றடைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டினார்.
சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கம், ஷான் சிய் மாநிலத்துக்கு கடும் அழிவை உருவாக்கியுள்ளது. 18ம் நாளிரவு 9 மணி வரை, ஷான் சிய் மாநிலத்தில், பாதிக்கப்பட்ட 89 மாவட்டங்களில் 113 பேர் உயிரிழந்தனர். 11 இலட்சத்து 20 ஆயிரம் பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு நிலை அரசுகள் புனரமைப்புப் பணிகளை வெகு விரைவில் துவங்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.
|