• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 10:22:01    
சீன மக்கள் இரங்கல்

cri

நேற்று பிற்பகல் 2:28 மணிக்கு, ஹு சிந்தாவ், சியாங் சேமின், வூ பாங்கோ, வென் சியாபாவ், சியா சிங்லின், லீ சாங்சுன், ஷி ச்சின்பீங், லீ க்ச்சியாங், ஹே கோச்சியாங், சோ யூங்காங் உள்ளிட்ட சீனத் தலைவர்களும், சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களும், சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று விடியற்காலை, பெய்சிங் தியே ஆன் மன் சதுக்கத்தில் வழக்கம் போல் கொடி ஏற்றம் நடைபெற்ற பின், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

நேற்று முற்பகல், சீனாவிலுள்ள 80 நாடுகளின் தூதர்களும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் சீன வெளியுறவு அமைச்சகத்துக்குச் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தவிர, ஹாங்காங் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களிலுள்ள அரசு வாரியங்கள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பிற்பகல் 2:28 மணிக்கு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புதவிப் பணியில் ஈடுபடுகின்ற ரஷியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின் சர்வதேச மீட்புதவிக் குழுக்களும் சீன மக்களுடன் இணைந்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முற்பகல், சிச்சுவான் சின் சாங் மாவட்டத்திலுள்ள பல மீட்புஉதவிப் பணியாளர்கள் மற்றும் மக்கள் சின் சாங் இடை நிலை பள்ளியில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று பிற்பகல் 2:28 மணிக்கு, லாசா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று 12 மணி வரையான புள்ளிவிபரங்களின் படி, வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான், கான்சூ, சான்சி, ச்சுங்ச்சிங், யுன்னான், ஜுபெய், ஹெனான், ஹுனான் மாநிலங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயித்து 73 ஆக உயர்ந்துள்ளது. 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். மே 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும், தேசிய மரண அஞ்சலித்தினல்களாக சீன அரசவை அறிவித்துள்ளது. இக்காலத்தில், சீனாவில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தற்காலிமாக நிறுத்தப்படும். மேலும், முழு நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள சீன நிறுவனங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பொழுது போக்கு நடவடிக்கை அனைத்தும் நிறுத்தப்பட்டன.