• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 15:51:43    
சர்வதேசச் சமூகத்தின் உதவி

cri

சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரேசில் ஆகியவை நிவாரணப் பொருட்களை தொடர்ந்து வழங்கும். தொடர்புடைய வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மீண்டும் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. உணவுப் பொருட்கள், மின்னாக்கிகள், காற்று அழுத்த பொறிகள் முதலிய நிவாரணப் பொருட்கள் நாளை Cheng Du நகரைச் சென்றடையும். இது வரை, அமெரிக்க அரசு மற்றும் பல்வேறு துறையினர் வழங்கிய உதவித்தொகை மற்றும் பொருட்களின் மொத்த தொகை 3 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டாலர்த் தாண்டியுள்ளது.

ரஷிய மருத்துவக் குழு இன்று முற்பகலிலும். 36 டன் மனித நேய நிவாரணப் பொருட்கள் ஏற்றிவந்த ரஷிய விமானம் இன்று பிற்பகலும் Cheng Du நகரைச் சென்றடைந்தது.

பிரேசில் உள்ளிட்ட 6 இலத்தின் அமெரிக்க நாடுகள், இன்று சீன வெளியுறவு அமைச்சகத்திடம் நிவாரணப் பொருட்களின் விபரபட்டியலை சமர்ப்பித்தன. சீனாவுக்கு 2 இலட்சம் அமெரிக்க டாலர் உதவித்தொகையை பிரேசில் வழங்கியது.