• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 16:12:25    
சீன-ஜப்பான் மக்கள் உள்ளத்தோடு உள்ளம் ஒன்றிணைவது

cri

ஜப்பானிலுள்ள சீன தூதரகம் மே 19ம் நாள் பிற்பகல் துக்க சூழ்நிலையில் மூழ்கியது. அஞ்சலி செலுத்து இடத்தில் தேசிய கொடி தலை சாய்த்துவைக்கப்பட்டிருந்தது. சிச்சவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் பலியானர்களுக்கு அஞ்சலி என்ற அனுதாப துணிபதாகை தூதரகத்தின் அஞ்சலி மண்டபத்தில் தொங்கவிடப்பட்டது. டோக்கியோ நேரப்படி பிற்பகல் 3:28 மணிக்கு, சீன பதில் தூதர் Kong Xianyou தலைமையிலான சீனாவையும் ஜப்பானையும் சேர்ந்த பல்வேறு துறையினர்கள், சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் பலியானர்களுக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் கூறியதாவது:

சிச்சுவான் கடும் நிலடுக்கத்தில் பலியானர்களுக்கு அஞ்சலி செலுத்து வோமாக என்றார் அவர்.

சீனாவிலுள்ள ஜப்பானிய தூதரகம்

நாங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் நேரடியாக செல்லாதிருந்த போதிலும், அனைத்து தூதாண்மை அதிகாரிகளும் பணியாளர்களும் பாதிக்கப்பட்டவர்களை பற்றி மிகவும் கவலைப்பட்டு வருகின்றோம். எங்கள் உடன்பிறப்புகள் இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் சிதறிவிட்டன. அதற்கு நாங்கள் மன வேதனை அடைகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசவையின் தலைமையில், பாதிக்கப்பட்டவர்கள் இச்சீற்றத்தை சமாளித்து, அருமையான தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை நனவாக்க நாங்கள் இறைவேண்டல் செய்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு வெகு விரைவில் இன்னல்களை சமாளிப்பதற்கு உதவ எங்களால் இயன்றதனைத்தையும் செய்ய நாங்கள் விரும்புகின்றோம் என்றார் அவர்.

Shen Lili என்ற சீன அம்மையார் கணவர், மற்றும் இரபடை குழந்தைகளோடு ஜப்பானிலுள்ள சீன தூதரகத்துக்கு சிறப்பாக வந்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவித்தொகையை வழங்கி, நிலநடுக்கத்தில் பலியானர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையில் கவனம் செலுத்தி வருவதோடு, சீன மக்களில் ஒருவராக இருப்பதில் தாம் பெருமை அடைவதாக அவர் கூறினார். அவருடைய கணவர் ஐப்பானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப்பணியில் ஈடுபட்ட ஜப்பானிய மீட்புதவிக்குழுவின் இரங்கல்

நிலநடுக்கம் ஏற்பட்ட பின், மாபெரும் அன்பையும் பொது ஒற்றுமையையும் சீனர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மிக குறுகிய நேரத்தில், சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தார். அதனை கற்பனை செய்ய முடியவில்லை என்றார் அவர். சிச்சுவான் குழந்தைகளுக்கு Shen Liliஇன் மகள் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சிச்சுவான் குழந்தைகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகின்றோம் என்றார் அவர்.
சுமார் 300 பேர் நேற்று பிற்பகல் ஜப்பானிலுள்ள சீன தூதரகத்துக்கு வந்து அஞ்சலி நடவடிக்கையில் கலந்துகொண்டனர். ஜப்பானிய கூட்டு செய்தி நிறுவனத்தின் தலைவர் satoshi ishikawa அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:

மாபெரும் இயற்கை சீற்றம் இதுவாகும். நாங்கள் பலியானர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள தருணத்தில், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் கூடியவிரையில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன், உலக மக்கள் கைக் கோர்த்துக்கொண்டு, ஒத்துழைப்பு அமைப்பு முறையை கூட்டாக உருவாக்க விரும்புகின்றோம் என்றார் அவர்.

ஜப்பானிய மீட்புதவிக் குழு

சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் ஜப்பான் மக்கள் அக்கறை செலுத்துவது, இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரிக்கும் என்று Kong Xuanyou கருதுகின்றார். அவர் கூறியதாவது:

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், ஜப்பானின் பல்வேறு துறைகள் மாபெரும் கவனம் செலுத்தியுள்ளன. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட பின், ஜப்பானின் செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமான எதிரொலி ஏற்பட்டது. இச்சீற்றத்தில், ஜப்பான் மக்கள் உள்பட அரசு, பல்வேறு கட்சிகள், மற்றும் துறையினர் பாதிக்கப்பட்ட சீனர்கள் மேல் அன்பு செலுத்தினர். கீழை நாடுகளின் பாரம்பரிய ஒழுக்க அறநெறியை இது காட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான அன்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இயற்கை சீற்றத்தைச் சமாளிப்பதற்கு இது உதவியளிப்பதோடு, இரு நாட்டு மக்களுக்கிடையிலான உணர்வை மேலும் மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பாக மாற முடியும் என்றார் அவர்.