ஐப்பான் மருத்துவ சிகிச்சை குழு, நேற்றிரவு சிறப்பு விமானம் மூலம் சீன சிச்சுவான் chengdu நகரை சென்றடைந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு வேண்டிய, கையடக்கமான ஊடுகதிர் அலை இயந்திரங்கள், இரத்தம் சோதனை செய்யும் செய்யும் கருவிகள் உள்ளிட்ட 5 டன் எடையுள்ள மருத்துவ சிகிச்சை பொருட்களை, அந்த விமானம் ஏற்றி வந்திருந்தது.
23 பேர், அந்த மருத்துவ சிகிச்சை குழுவில் இடம்பெறுகின்றனர். அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், தொற்று நோய் முதலிய துறைகளிலான நிபுணர்கள், அவர்களில் அடங்குவர். சென்றடைந்தவடன், அவர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இன்று இத்தாலிய மருத்துவ சிகிச்சை குழுவும், நாளை ஜெர்மன் மருத்துவ சிகிச்சை குழுவும் chengdu நகரை சென்றடையும் என்று தெரிகிறது.
|