அண்மையில், ஜோர்டான், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள், சீன வென்ச்சுவான் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பொருள் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியை அளித்தன.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஜோர்டான் மன்னர் Hashemite வழங்குகின்ற உதவிப் பொருட்கள், இன்று அதிகாலை,சிறப்பு விமானம் மூலம் chengdu விமான நிலையத்தை சென்றடைந்துள்ளன. ஜோர்டான் வழங்கிய கூடாரங்கள், மெத்தைகள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்ரை அனுப்ப, மன்னர் இரண்டாம் அப்துல்லா கட்டளையிட்டார்.
ஐப்பான் மருத்துவ சிகிச்சை குழு, நேற்றிரவு சிறப்பு விமானத்தில் சீன சிச்சுவான் chengdu நகரை சென்றடைந்தது. 23 பேர், அந்த மருத்துவ சிகிச்சை குழுவில் இடம்பெறுகின்றனர். அறுவைசிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், தொற்று நோய் முதலிய துறைகளிலான நிபுணர்கள், அவர்களில் அடங்குவர். பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு வேண்டிய, கையடக்கமான ஊடுகதிரலை கருவிகள், ரத்தம் சோதனை செய்யும் கருவிகள் உள்ளிட்ட 5 டன் எடையுள்ள மருத்துவப் பொருட்களை, அந்த விமானம் ஏற்றி வந்தது.
பத்துக்கு மேலான ஜெர்மனி நிபுணர்கள் அடங்கிய, சர்வதேசத்தில் முதலாவது களத்தில் இறங்கி பணிபுரியும் மருத்துவ சிகிச்சை மீட்பு குழு, 19ம் நாளிரவு சீன சிச்சுவான் சென்றடைந்துள்ளது. சீனாவும் ஜெர்மனியும் கூட்டாக சிச்சுவானில் களத்தில் பணிபுரியும் மருத்துவமனையை நிறுவும். ஜெர்மனி நிபுணர்களுக்கு, முன்னேறிய மருத்துவக் கருவிகளும் சிறந்த தொழில் நுட்பமும் உண்டு. இது, பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மருத்துவ சிகிச்சையின் ஆற்றலை உயர்த்துவதற்கு துணை புரியும்.
|