• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 08:50:55    
குபுசி பாலைவனத்தில் புதிதாக ஏற்பட்ட மாற்றம்

cri

சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் எல்தோஸ் பகுதி, வட சீனாவில் முக்கியமான உயிரின வாழ்க்கைக்கான பாதுகாப்புத் திரையாகும். அதன் உயிரின வாழ்க்கைச் சூழல் நிலை, பெய்ஜிங் உள்ளிட்ட வட சீனாவின் வானிலைக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் 7வது பெரிய பாலைவனமான குபுசி பாலைவனம், எல்தோஸ் பகுதியில் அமைந்துள்ளது. அங்குள்ள உயிரின வாழ்க்கை சூழ்நிலையை மேம்படுத்த, சீன அரசு ஆக்கப்பூர்வமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது பல தொழில் நிறுவனங்கள் பாலைவனக் கட்டுப்பாட்டில் பங்கெடுத்துள்ளன.

ஆயர் Heshigtogtoh குழந்தை பருவத்திலிருந்து குபுசி பாலைவனத்தின் மையப் பகுதியில் வாழ்ந்து, நாடோடி வாழ்க்கை நடத்தி வருகிறார். பாலைவனத்தில் வானிலை மோசமாக இருப்பதால், மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதோடு, ஆடு மாடுகளின் வளர்ப்பும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மேலும், குழாய் நீரும் மின்சாரமும் இல்லை என்பதால், அங்குள்ள வாழ்க்கையில் இன்னல்கள் அதிகம். ஆனால், 2006ஆம் ஆண்டில், Heshigtogtohஇன் குடும்பம் ஆயர்களுக்கான புதிய கிராமத்தில் குடிபெயர்ந்தது. வாழ்க்கை நிலை சீராகி வருவதோடு, அவரது குடும்ப வருமானமும் முன்பை விட அதிகரித்துள்ளது. தற்போது, ஆடு மாடுகளை மேய்ப்பதற்குப் பதிலாக, Heshigtogtoh ஆடு மாடுகளை தொழுவத்தில் வளர்க்கத் துவங்கியுள்ளார். தவிரவும், அவரது வீட்டில் காய்கறி கூடாரம் உள்ளது. சொந்த குடும்பத்தின் தேவை நிறைவேற்றப்பட்ட பின், மிஞ்சிய வேளாண் விளைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படலாம்.

ஆயருக்கான புதிய கிராமத்துக்கு அருகில், சுற்றுலா தலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் போது, Heshigtogtohவின் குடும்பம் ஒரு உணவு விடுதியாக சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது.

2005ஆம் ஆண்டு, YI LI மூலவள குழுமம் என்ற அரசு சாரா தொழில் நிறுவனம் திட்டத்தை உருவாக்கி முதலீடு செய்து, ஆயருக்கான புதிய கிராமத்தையும் சுற்றுப்புறத்திலுள்ள காட்சி தலங்களையும் கட்டியமைத்தது. ஆயருக்கான புதிய கிராமத்தைக் கட்டியமைக்கும் காரணம் பற்றிக் குறிப்பிடுகையில், விளை நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றுவது என்பது தமது முக்கிய நோக்கமாகும் என்று YI LI குழுமத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் WANG WEN BIAO கூறினார்.

இவ்வாண்டு 50 வயதான WANG WEN BIAO குபுசி பாலைவனத்தின் மீது ஆழ்ந்த உணர்வு கொள்கிறார். 1995ஆம் ஆண்டு, பாலைவனத்தில் திவாலாகும் விளிம்பிலான உப்பு உற்பத்தி ஆலையின் அடிப்படையில் YI LI குழுமத்தை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டில் குபுசி பாலைவனத்தில் பாலைவனத்தை கடக்கும் முதலாவது நெடுஞ்சாலையின் கட்டுமானம், WANG WEN BIAOவின் பாலைவனக் கட்டுப்பாட்டுப் பணியின் தொடக்கமாகும்.

"அப்போது பாலைவனத்தில் நெடுஞ்சாலை, மின்சாரம், குழாய் நீர் ஆகியவை இல்லை. தொலைத் தொடர்புச் சாதனமும் இல்லை. தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் வெளியே ஏற்றிச் செல்லப்பட முடியவில்லை" என்றார் WANG WEN BIAO.

ஆகவே, பாலைவனத்தைக் கடக்கும் நெடுஞ்சாலையைக் கட்டியமைக்க, YI LI குழுமம் 7 கோடியே 50 இலட்சம் யுவான் முதலீடு செய்தது. 2 ஆண்டுகால முயற்சிகள் மூலம், குபுசி பாலைவனத்திலான முதலாவது பாலைவனத்தை கடக்கும் நெடுஞ்சாலை 1999ஆம் ஆண்டில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 65 கிலோமீட்டர் நீளமுடைய இந்த நெடுஞ்சாலை பாலைவனத்திலான அற்புதமாக அழைக்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலை மூலம் தொழில் நிறுவனத்தின் போக்குவரத்து செலவு சிக்கனப்படுத்தப்பட்ட அதே வேளை, நீர், மின்சாரம், தொலைத் தொடர்பு ஆகியவை இல்லாத காலத்தை அங்குள்ள 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயர்கள் நீக்கியுள்ளனர். WANG WEN BIAO கூறியதாவது—

"இந்தப் பாலைவனம் கட்டுப்படுத்தப்படக் கூடியது. குறிப்பாக அது பயன்படுத்தப்படக் கூடியது. இதனால், அதில் அதிமதுரச் செடியை பயிரிடத் துவங்கினோம்" என்றார் அவர்.

உயிரின வாழ்க்கைச் சூழல் தளத்தின் அடிப்படையில், அதிமதுரத்தை முக்கியமாகக் கொண்ட பாலைவனக் கட்டுப்பாட்டுத் தொழில் திட்டப்பணியைச் செயல்படுத்துவது, YI LI குழுமம் மேற்கொண்ட மற்றொரு பெரிய நடவடிக்கையாகும்.

முழுமையான தொழில் சங்கிலியை YI LI குழுமம் உருவாக்கியுள்ளது. அதன் கீழுள்ள மருந்து தயாரிப்பு ஆலை அதிமதுரத்தை முக்கிய மூலப்பொருளாக கொண்ட மருந்துகளை உற்பத்தி செய்கிறது. அத்துடன், முன்பதிவு படிவத்தில் கையொப்பமிடும் வழிமுறை மூலம் அதிமதுரச் செடியை பயிரிட உள்ளூர் ஆயர்களுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அதே வேளையில், தொழில் நிறுவனத்தை வளர்க்கிறது. மேலும், விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கும் இது துணைபுரியும். இந்நடவடிக்கைகள் பயன்மிக்கவை என்று WANG WEN BIAO கூறினார்.