பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூடாரங்கள் தேவை
cri
தற்போது, சிச்சுவானின் Wenchuan நிலநடுக்கத்தால், 50 இலட்சத்துக்கு மேலானர், வீடுவாசலின்றி அல்லல்படுகின்றனர். தற்போது, பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் வகையில், கூடாரங்கள் உடனடி தேவையாக உள்ளன. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீட்டில் தங்குவது, தற்போது பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் முக்கிய முறையாகும். அரசு அலுவலகங்கள் உள்ளிட பொது வசதிகள் கொண்ட இடங்கள், பொது இடங்கள் திறக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் வீடிழந்த மக்கள் அவற்றில் தற்காலிகமாக வசிக்கின்றனர். பொது துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்துவதில் பயன்படுத்துவதற்காக, 2 இலட்சத்து 80 ஆயிரம் கூடாரங்களை அனுப்பியுள்ளது. ஆனால், அவை போதாது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பற்றாக்குறையான பொருட்கள் கூடாரங்கள் என்று தெரிகிறது.
|
|