• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 14:46:05    
பாதிக்கப்பட்ட மக்களை சீனா குடியமர்த்தும் பணி

cri

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீன அரசு மீட்புதவியை அவசரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுடன், அவர்களின் அடிப்படை வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய, பொருட்கள் வினியோகத்தைச் சீராக்கிவதற்காக, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது. மே 20ம் நாள் பிற்பகல் 2 மணி வரை, நிலநடுக்க பேரிடரைச் சமாளிப்பதில், சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் மொத்தம் 1170 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொது மக்களின் வாழ்க்கையில் ஒழுங்கான இயல்பு நிலையை உருவாக்க, தற்போது, தொடர்புடைய வாரிங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன என்று பொதுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 12 நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் ரிச்டர் அளவையில் எட்டு ஆக பதிவான கடும் நில நடுக்கம் நிகழ்ந்தது. அதில், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. மாபெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மைய பிரதேசத்தில், போக்குவரத்து, மின்சார வினியோகம், தொலைத்தொடர்பு ஆகியவை, துண்டிக்கப்பட்டன. பொது வசதிகள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டன. நிலநடுக்கம் நிகழந்ததுடன், சீன அரசும், தொடர்புடைய வாரியங்களும் உடனடியாக அவசர மீட்புதவியைத் தொடங்கின. போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர் ஆகிய வசதிகளை மீட்டு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தானியம் மற்றும் உணவு எண்ணெய் வினியோகத்தை உத்தரவாதம் செய்வதோடு, மக்களைக் குடியமர்த்தும் பணியை செவ்வனே செயல்படுத்தி, அடிப்படை வாழ்க்கை தேவையை நிறைவு செய்ய, பாடுபட்டு வருகின்றன.

நேற்று சீன அரசவை செய்தி துறை அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், சீனப் பொது துறை துணை அமைச்சர் சியாங் லி அம்மையார் மீட்புதவி நிலைமையை அறிமுகப்படுத்தினார்.

இதுவரை, சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் கூடாரங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவை போதுமானதாகயில்லை. தற்போது, பொது துறை அமைச்சகம், 7 இலட்சம் கூடாரங்களை அவசரமாக கொள்வனவு செய்துள்ளது. நடமாடும் வீடுகளை உற்பத்தி செய்ய, தொடர்புடைய வாரியங்கள் அணி திரண்டுள்ளன. வீடுவாசலின்றி தவிக்கின்றவர்களுக்கு அடிப்படை வாழ்க்கைக்கான வசிப்பிடங்களை வழங்க முழு மூச்சுடன் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.

மே 19ம் நாள் வரை, பொது துறை அமைச்சகமும், நிதியமைச்சகமும், சிச்சுவான், கான்சூ, சான்சி, சொங்ச்சிங், யுன்னான் ஆகிய 5 மாநிலங்களுக்கு, 96 கோடி யுவான் அவசர மீட்புதவி நிதித்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளன. 2 இலட்சத்து 78 ஆயிரம் கூடாரங்கள், 7 இலட்சத்து 80 ஆயிரம் போர்வைகள், 17 இலட்சத்து 80 ஆயிரம் பஞ்சு ஆடைகள், 21 கோடியே 80 இலட்சம் யுவான் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகிய மீட்புதவி பொருட்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வாழ்க்கை உதவி அளிக்க, நடுவண் அரசின் நிதி துறை, நேற்று 250 கோடி யுவான் தற்காலிக வாழ்க்கை உதவித்தொகையை அவசரமாக ஒதுக்கீடு செய்துள்ளது.

நிலநடுக்கத்தால், 50 இலட்சத்துக்கு மேலானோர் வீடுவாசலின்றி அல்லல்படுவது மட்டுமல்ல, பலர் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்துள்ளனர். உளவியல் நிபுணர்களும், சமூக பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்து, பாதிக்கப்பட்ட சிறப்பு பொது மக்களுக்கு, உளநல ரீதியான கவனத்தையும் ஆறுதலையும் வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

மே 20ம் நாள் பிற்பகல் 2 மணி வரை, பல்வேறு துறைகளின் நன்கொடைதொகையும் பொருட்களும், 1390 கோடி யுவானை எட்டியுள்ளது. மீட்புதவி நிதிக்கான நிர்வாகத்தையும் கண்காணிப்பையும் சீன அரசு வலுப்படுத்தி, இந்த சிறப்பு நிதியும் நன்கொடைத்தொகையும் காலதாமதமின்றி பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மிக இக்கட்டான பாதிப்பிலுள்ள மக்களுக்கு உண்மையாக பயன்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்கிறது.

பொதுத் துறை அமைச்சகத்தின் மீட்புதவி பிரிவின் துணைத் தலைவர் Pang chen min அம்மையார் கூறியதாவது:

சிச்சுவான், கான்சூ, சான்சி ஆகிய கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், இந்நிதி முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டுமென்று கோரினோம்.

எதிர்காலத்தில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்பை ஆக்கப்பூரவமாக ஆராய்ந்து, நீண்டகாலத் திட்டத்தை வகுத்து, பாதிக்கப்பட்ட மக்கள், தாயகத்தை வெகுவிரைவில் மீட்பதற்கு உதவி அளிக்க வேண்டும் என்று, சீனப் பொது துறை துணை அமைச்சர் சியாங் லி அம்மையார் தெரிவித்தார்.