• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 18:19:26    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நச்சுயிரி மற்றும் நோய் தடுப்புப் பணி

cri
தற்போது, சீன சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயிர்த் தப்பி பிழைத்தோரைக் கண்டறிந்து காப்பாற்ற பல மீட்புதவிப் பணியாளர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பாடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், இந்தப் பிரதேசங்களில் நோய் தடுப்புப் பணியும் பன்முகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புள்ளிவிவரங்களின் படி, இப்பணியில் ஈடுபட்ட சிறப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை சில ஆயிரத்தை எட்டியுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட 12 பிரதேசங்களில், நச்சுயிரி நீக்குதல், பூதவுடல்களைக் கையாளுதல் முதலிய பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கடும் தொற்றுநோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவம் நிகழ்ந்தது பற்றிய தகவல் ஏதும் இல்லை.

12ம் நாள் நிகழ்ந்த வென் சுவான் நிலநடுக்கத்தால் கடும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் இழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. மேலும் அதிக வாழ்க்கை குப்பைப் பொருட்கள் உரிய நேரத்தில் கையாளப்படவில்லை. உள்ளூர் பிரதேசங்களில் தட்பவெப்பம் படிப்படியாக உயர்வதுடன், பெரும் அளவிலான நோய் நிலைமை ஏற்படும் அபாயம் நிலவுகின்றது. இது குறித்து, நிலநடுக்கத்துக்குப் பின், சீன சுகாதார அமைச்சகம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பல ஆயிரம் சுகாதார நோய் தடுப்பு பணியாளர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. 19ம் நாள் வரை, நோய் தடுப்புப் பணியாளர்கள் சுமார் 10 கோடி சதுர மீட்டர் பரப்பில் நச்சுயிரி ஒழிப்புப் பணியை நிறைவேற்றியுள்ளனர். 8400க்கு அதிகமான பூதவுடல்கள் முறையாகக் கையாளப்பட்டுள்ளன.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மியன் யாங் நகரின் பெய் சுவான் மாவட்டத்தில், பல சுகாதார பணியாளர்கள் நாள்தோறும் எல்லா இடங்களிலும் நச்சுயிரி ஒழிப்பு மருந்தை தெளிக்கின்றனர். மியன் யாங் நகர நோய் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த பணியாளர் feng yang, 13ம் நாள் பெய் சுவான் மாவட்டம் சென்றடைந்தார். நாள்தோறும் அவர் 10 மணி நேரத்து அதிகமாக பணி புரிகின்றார். அவர் கூறியதாவது

காலை ஏழரை மணியளவில் பணிக்குப் புறப்பட்டோம். மாலை 6 மணி வரை பணி புரிகின்றோம். சில வேளையில், கூடுதலாக பணி புரிய வேண்டும். நாள்தோறும் 5,6 மணி நேரம் தூங்கலாம். தடுகவச ஆடை, கையுறை, முகமூடி முதலிய போதுமான வசதிகளைப் பயன்படுத்துகின்றோம். தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது என்றார் அவர்.

உள்ளுர் பணியாளர்களைத் தவிர, ச்சியாங் சூ, பெய்ஜிங் முதலிய இடங்களிலிருந்து வந்த பணியாளர்களும் பெய் சுவான் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நோய் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்தும் வகையில், சீனப் படையைச் சேர்ந்த ஒரு வேதியியல் ஆயுத தடுப்புப் பிரிவும் பெய் சுவான் சென்றடைந்துள்ளது. அவர்களது சிறப்பு தொழில் நுட்ப வசதிகள் பணியின் பயனை உயர்த்தியுள்ளன.

பெய் சுவான் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணியில் தெளிவான பயன் பெறப்பட்டுள்ளது என்று மியன் யாங் நோய் தடுப்பு மையத்தின் பொறுப்பாளர் hu yong கூறினார். அவர் கூறியதாவது

களைப்பைப் பொருட்படுத்தாமல், அறிவியல் முறையில் பயனுள்ள நடவடிக்கையின் மூலம் நோய் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது சிறப்பான பயன் பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.

வென் சுவான், சிங் சுவான் முதலிய கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் நச்சுயிரி மற்றும் நோய் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நோய் நிலைமை நிகழாமல் தவிர்ப்பதில் இது பயன் தந்துள்ளது. தவிர, பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் குடிநீர் மூலவளம், உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள், நீர் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தும் இடங்கள் ஆகியவற்றிலும், சுகாதார கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய வாரியங்கள், மக்களிடையிலும் மீட்புதவி பணியாளர்களிடையிலும் சுகாதார மற்றும் நோய் தடுப்பு அறிவுகளைப் பரப்பி, அவர்களது சொந்த நோய் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்தியுள்ளன.

மியன் யாங் நோய் தடுப்பு மையத்தின் பொறுப்பாளர் hu yong மேலும் கூறியதாவது

மீட்புதவிப் பணியாளர்கள் அனைவரும் வெளியேறிய பின், நச்சுயிரி ஒழிப்புப் பணியும், நீர் தர கண்காணிப்புப் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தடுப்பு பணியாளர்களான நாங்கள் இறுதியாக வெளியேறுவோம். நோய் தடுப்பு மையம் பின் தொடரும் பணி மேற்கொள்ளும் என்றார் அவர்.

சீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் mao quan an இன்று எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 40 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். கடும் தொற்றுநோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவம் நிகழ்ந்தது பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நோய் தடுப்பு நிபுணர்கள் நாள்தோறும் புதிய நிலைமையை பகுத்தாராய்ந்து , நோய் தடுப்பு பணியை ஏற்பாடு செய்கின்றனர் என்றும் அவர் எடுத்து கூறினார்.