பேரிடர் நீக்கப் பணியும் பொருளாதார வளர்ச்சியும்
cri
தற்போது, பேரிடர் நீக்கப் பணியில் தயக்கமின்றி ஈடுபடும் அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியை உறுதியாக விரைவுப்படுத்த வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் இன்று பெய்ஜிங்கில் வலியுறுத்தினார். இன்று பெய்ஜிங்கில் சீன அரசவை நிரந்தரக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கி, தற்போதைய பேரிடர் நீக்கப் பணியையும் பொருளாதாரப் பணியையும் குறித்த ஏற்பாடுகளை செய்தார். பேரிடர் நீக்கப்பணியையும், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பணியையும் முழு மூச்சுடன் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் நோய் தடுப்புப் பணியை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்தப் பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் செப்பனிட வேண்டும். புதிய இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். உற்பத்தியை மீட்பதற்கும், மறுசீரமைப்புப் பணிக்கும் கூடிய விரைவில் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
|
|