• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 16:31:02    
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார பணி

cri

சீனச் சுகாதார அமைச்சகம் அனுப்பிய மருத்துவ சிகிச்சைக்குழுக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் நுழைந்து பணியை மேற்கொண்டுள்ளன என்று சீனச் சுகாதார அமைச்சத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகிறது.

தற்போது, சிச்சுவான் மாநிலத்தில் மருத்துவ சிகிச்சைப் பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்துக்கு மேலாகும். மருத்துவ சிகிச்சை, நோய் தடுப்பு, நலவாழ்வுக்கான கண்காணிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 11ஆயிரமாகும்.

மே 21ம் நாள் வரை, சீனச் சுகாதார அமைச்சகம் நாடுமுழுவதிலுமிருந்து சிச்சுவானுக்கு அனுப்பிய நோய் தடுப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 2000க்கு மேலாகும். தற்போது, உள்ளூர் நோய் தடுப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 5250க்கு அதிகமான நோய் தடுப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது வரை, சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேங்களில் கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்று தெரிய வருகின்றது.