21ம் நாள் நண்பகல் 12மணி வரை, சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆயிரத்து 353 ஆகும். 2லட்சத்து 70ஆயிரம் பேர் காயமுற்றனர். சுமார் 32ஆயிரம் பேர் காணாமல் போயினர்.
சீன அரசவை செய்தி அலுவலகம் இன்று பெய்சிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதை அறிவித்தது.
20ம் நாள் நள்ளிரவு வரை, மீட்புதவிப் பணியாளர்கள் 3லட்சத்து 96 ஆயிரத்து 811 பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி, இடிபாடுகளிலிருந்து 6452 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
21ம் நாள் நன்பகல் 12மணி வரை, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 1600கோடி யுவானாகும்.
தவிரவும், சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில் மொத்தம் 1290கோடி யுவானை ஒதுக்கியுள்ளன.
|