• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 19:57:31    
நிலநடுக்கத்தின் நிலைமை

cri

21ம் நாள் நண்பகல் 12மணி வரை, சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆயிரத்து 353 ஆகும். 2லட்சத்து 74ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். 32ஆயிரம் 666 பேர் காணாமல் போயினர்.
சீன அரசவை செய்தி அலுவலகம் இன்று பெய்சிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதை அறிவித்தது.

20ம் நாள் நள்ளிரவு வரை, மீட்புதவிப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட 3லட்சத்து 96 ஆயிரத்து 811 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி, இடிபாடுகளிலிருந்து 6452 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள காயமுற்றோரின் மொத்த எண்ணிக்கை 59ஆயிரத்து 394ஆகும். அவர்களில் 30ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர் என்று சீனச் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

21ம் நாள் நண்பகல் 12மணி வரை, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 1600.9கோடி யுவானாகும்.

சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில் மொத்தம் 1286.7கோடி யுவானை ஒதுக்கியுள்ளன என்று சீன நிதி அமைச்சகம் கூறியது.

20ம் நாள் பிற்பகல் வரை, சிச்சவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் தங்க வைக்கப்பட்ட 14 தைவான் பயணியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தைவானுக்கு திரும்பியுள்ளனர் என்று சீன அரசவையைச் சேர்ந்த தைவான் விவகாரப் பணியகம் கூறியது.