அண்மையில் சில வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டு, மே 19, 20 மற்றும் 21 நாட்களில் நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படுவது பற்றிய சீன அரசின் நடவடிக்கை, சீனப் பண்பாட்டு பாரம்பரியத்துக்குப் பொருந்தியதாகவும், மனித முதன்மை என்ற எழுச்சியையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்து என்று கருத்து தெரிவித்தன.
Financial Times என்ற பிரிட்டனின் செய்தி ஊடகம் தனது இணைய தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், நவ சீனா நிறுவப்பட்டது முதல், கடும் நிலநடுக்கத்தில் உயிர் இழந்த உடன்பிறப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சிறப்பாக 3 நாட்கள் நீடித்த துக்கம் அனுசரிக்கப்பட்டது. இது மட்டுமல்ல, ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்த சீன அரசு முடிவு செய்தது. சர்வதேசச் சமூகத்தில் சேர்ந்த சீனாவின் புதிய கருத்தை இது வெளிப்படுத்தியது என்று கருதியது.
நிலநடுக்கத்துக்கு பின், பல சீனர்கள் வலுவான நாட்டுப்பற்று உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஜப்பான் பொருளாதார செய்தியேடு கூறியது.
|