இன்று சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகார அலுவலகத்தில் சீனாவிலுள் 47 நாடுகளின் 61 இராணுவ விவகார அதிகாரிகள் சீன மக்கள் விடுதலைப் படை மற்றும் ஆயுதத் காவற்துறையின் பேரிடர் நீக்கப் பணி பற்றிய நிலைமையைக் கேட்டறிந்து, சீனப்படை பெற்ற செயலாக்க முன்னேற்றத்தை பாராட்டினர்.
இப்பேரிடர் நீக்க நடவடிக்கையில், சீனப் படைப் பிரிவுகள் சிறந்த பங்கு ஆற்றியுள்ளன. அவை வெளிப்படுத்திய விரைவான செயல்பாடும் உறுதியான விடாமுயற்சி மற்றும் துணிவும் தங்களது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளதாக, அவர்களில் சிலர் சிங்குவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் கூறினர்.
சீனாவிலுள்ள சில இராணுவ விவகார அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கினர்.
|