ஜப்பான் மீட்புதவிக் குழு இன்று விடியற்காலை சிறப்பு விமானம் மூலம் பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, நாடு திரும்பியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களில் மனித நேய எழுச்சியையும் சீன மக்களுக்கான நட்புணர்வையும் ஜப்பான் மீட்புதவிக் குழு வெளிப்படுத்தியதற்கு சீனா நன்றி தெரிவித்தது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவிக் குழுவை முதலாவதாக அனுப்பிய நாடு ஜப்பானாகும். மீட்புதவிக் குழு இப்பிரதேசங்களைச் சென்றடைந்தவுடன், தங்கள் உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், பேரிடர் நீக்கப் பணிகளை முழுவதுமாக மேற்கொண்டு்ள்ளனர்.
|