நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்களை ஹாங்காங் செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்து அனுப்பும். தவிர, காங் சு மற்றும் சாங் சிய் மாநிலத்துக்கு இரண்டு மீட்புஉதவிக் குழுக்களை அது அனுப்பும் என்று ஹாங்காங் செஞ்சிலுவை சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் Huang Mohui நேற்று ஹாங்காங்கில் தெரிவித்தார்.
ஹாங்காங்கின் பல்வேறு துறையினர் அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்காக வழங்கிய உதவித்தொகை 25 கோடி ஹாங்காங் டாலரைத் தாண்டியுள்ளது. ஹாங்காங் நகரவாசிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நன் கொடை வழங்க வேண்டும் என்று Huang Mohui வேண்டுகோள் விடுத்தார்.
|