கடந்த சில நாட்கள், வெளிநாடுகளிலுள்ள சீன தூதரங்கள், துணை நிலை தூதரகங்கள், சர்வதேச அமைப்புக்களின் சீன பிரதிநிதி அலுவலகங்கள் ஆகியவற்றுக்குச் சென்று சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய போது, சீன அரசின் பேரிடர் மீட்புப் பணியை வெளிநாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் வெகுவாகப் பாராட்டினர்.
பேரழிவு ஏற்பட்ட பின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு சீன அரசுத் தலைவர்கள் உடனடியாகச் சென்று, பேரிடர் மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கினர். சீன மக்கள் இன்னல்களைச் சமாளித்து வெற்றி பெற்று, தாயகத்தை வெகுவிரைவில் சீரமைப்பர் என்று ஜப்பானிய தலைமையமைச்சர் fukuda yasuo நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.
மனித மற்றும் மக்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை, அறிவியல்பூர்வமான மீட்புப் பணியில் ஈடுபடுவது என்ற கோட்பாடுகளை சீன அரசின் பேரிடர் மீட்புப் பணி வெளிப்படுத்தியுள்ளது என்று தான்சானிய அரசுத் தலைவர் jakaya kikwete தெரிவித்தார்.சீன அரசின் விரைவான, பயனுடைய பேரிடர் மீட்புப் பணி குறித்து இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே வியப்பு தெரிவித்தார்.
|