சீன தணிக்கை ஆணையத்தின் தலைவர் liujiayi நேற்று சிச்சுவான் மாநிலத்துக்குச் சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையை பரிசோதனை செய்தார்.
வென்சுவான் நிலநடுக்கத்தின் பேரிடர் மீட்புப் பணிக்கான உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களின் தணிக்கைப் பணி குறித்து தணிக்கையாளர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுவது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
தற்போதைய பேரிடர் மீட்புப் பணி, பேரிடரை நீக்குவது மற்றும் பாதிக்கப்படோருக்குரிய மாற்று ஏற்பாடுகளை நிறைவேற்றும் பணிக் கட்டமாக இருக்கிறது. தணிக்கை மூலம், நிதியின் சிறப்பு ஒதுக்கீடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையின் உண்மையான நோக்கத்தை பன்முகங்களிலும் நனவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தணிக்கைப் பணியை தொகுப்பதையும், பேரிடர் மீட்புப் பணிக்கான நிவாரண நிதி மற்றும் பொருட்கள் பற்றிய நிதானமான அமைப்புமுறையை உருவாக்குவதையும் முன்னேற்ற வேண்டும் என்று liujiayi தெரிவித்தார்.
|