
கடந்த மே முதல் நாள், உலக உழைப்பாளிகளின் நாளாகும். இதைக் கொண்டாடும் வகையில், சீன அரசு 3 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த 3 நாளில், மக்கள் பலர் சுற்றுப் பயணம் மேற்கொள்வது வழக்கம். சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு உதவும் வகையில், இங்கு சில ஆலோசனைகளை வழங்குகிறோம். விடுமுறைகளில் சுற்றுலா செல்வது அல்லது இதர பயண திட்டங்கள் பலருக்கும் உண்டு.
 சிறப்பு முன்மொழிவுகள்: முதலாவது, தொடர் வண்டியைத் தேர்ந்தெடுப்பது. ஏனென்றால், தொடர் வண்டியின் கட்டணம் குறைவாக இருக்கின்றது. அத்துடன், இரவு நேரங்களில், தொடர் வண்டியில், தூங்கலாம். நேரத்தையும் சிக்கனப்படுத்தலாம். இரண்டாவது, செல்ல தயார் செய்யும் போது, பால், உப்பு, இஞ்சி ஆகிய பொருட்களைப் பையில், எடுத்துச்செல்வது நல்லது. அது, வழியில் உடல் நலத்துக்குத் துணை புரியும்.

|