1...சிச்சுவான் மாநிலத்தின் வென்ச் சுவான் பிரதேசத்தில் மே 12ம் நாள் 2.28 மணிக்கு ரிச்டர் அளவையில் 8ஆக பதிவான நில நடுக்கம் ஏற்பட்ட பின் சீன அரசின் மனபான்மை என்ன?
சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் நிலநடுக்கம் நிகழ்ந்த செய்தியை அறிந்ததுடன் இராணுவ விமானம் மூலம் விரைந்து சிச்சுவான் மாநிலத்தின் சங்து நகரை இரவு 8 மணிக்கு சென்றடைந்தார். உடனே பேரிடர் நீக்க தலைமை ஆணையத்தை நிறுவி அதற்கு தலைமை தாங்கினார். அன்று நள்ளிரவு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொது செயலாளர் ஹுச்சிந்தாவ் தலைமையிலான மத்திய அரசியல் குழுவின் நிரந்தர கமிட்டி அவசர கூட்டம் நடத்தி பேரிடர் நீக்க மீட்புதவி பணி பற்றி விவாதித்து ஏற்பாடு செய்தது.
2. சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ், தலைமை
அமைச்சர் வென்சியாபாவின் தலைமையில் பேரிடர் நீக்கப்
பணி துவங்கிய பின் முதலில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைந்து சென்றார்கள் யார்?
கண்டிப்பாக சீன மக்கள் விடுதலை படையினர் தான். 12ம் நாள் சீன ஆயுத காவற்துறையினரும் சீன விடுதலை படையினரும் பெய்ஜிங் மாநகரிலிருந்து விமானம் மூலம் விரைந்து அங்கே சென்றடைந்தனர். உடனே மக்களை காபாற்றும் பணியில் ஈடுப்பட துவங்கினர். இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சீனப் படையினர் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்து வருகின்றனர். அவர்கள் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எண்ில்லா கடின இன்னல்களை நீக்கி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற முழு முயற்சி செய்தனர். அவர்களால் காபாற்றப்பட்ட மக்களின் மொத்த எண்ணி்க்கை 2 இலட்சத்துக்கு மேலாகும்.
3. நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன் அதன் அதிர்வு சீனாவில் பிற
பகுதிகளில் இருந்ததா?
மே 12ம் நாள் பிற்பகல் 2.28 மணிக்கு சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கேன்சு, சாங்சி பெய்ஜிங், ஷாங்காய் முதலிய மாநிலங்கள் மற்றும் மாநகரங்களுக்கு நில நடுக்க அதிர் பரவியது. பெய்ஜிங்கில் சீன வானொலி உள்ளிட்ட பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வெவேறான அளவில் அதனை உணர்ந்தனர்.
4. அப்போது மக்கள் என்ன செய்தார்கள்?
1976ம் ஆண்டில் சீனாவின் ஹோ பேய் மாநிலத்தின் தான்சான் நகரில் நில நடுக்கம் நிகழ்ந்த போது பெய்ஜிங் மக்களுக்கு நில நடுக்க அதிர்வை உணர்ந்த அனுபவம் உண்டு. ஆகவே இம்முறை அவர்கள் முதலில் அமைதியாக தொடர்ந்து பணி புரிந்தார்கள். சீன அரசு சார் தொலைக் காட்சி மற்றும் வானொலி மூலம் அறிவிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் நில நடுக்கம் நிகழ்ந்த செய்தியை கேட்டபின், வெளிநாடுகளுக்கு செய்தி அறிவிப்புக்குப் பொறுப்பான நாம் உடனடியாக நமது வானொலியின் 43 மொழி இணையங்களிலும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் நில நடுக்கம் பற்றி செய்தியை அறிவித்தோம். அத்துடன் அதற்கான சிறப்பு இணைய பக்கத்தையும் உருவாக்கியுள்ளோம். 12ம் நாள் முதல் இது வரையான நில நடுக்கம் பற்றிய செய்திகள் இடர் நீக்கப் பணி மீட்புதவி பணிகள் ஆகியவை பற்றி நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட செய்திகளை நாம் இணையம் மூலம் வெளியிட்டுள்ளோம். நில நடுக்கம் தொடர்பான செய்திகளை 12ம் நாள் முதல் உலகத்திற்கு அறிவித்து வருகின்றோம்.
5. நிலநடுக்கம் நிகழ்ந்த பின் சென்னையிலுள்ள சன்நியூஸ்
தொலைக் காட்சி செய்தியாளர் சீன வானொலி தமிழ் பிரிவுடன் தொடர்பு கொண்டு நில நடுக்கம் பற்றிய செய்தியை தொலை பேசி வழியாக பதிவு செய்ய அறிவிக்குமாறு வேண்டி கொண்டார். அல்லவா?
ஆமாம். அது உண்மைதான். 12ம் நாள் மாலை 6 மணியளவில் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் அலுவலகத்தில் தொலை பேசி மணி ஒலித்தது. முன்பு போல கலைமணி தொலை பேசியை எடுத்து பேசினார். தமிழக சன்நியூஸ் தொலைக் காட்சி நிலையத்திலிருந்து அழைப்பு என்று கூறப்பட்ட போது தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி உடனே தொலை பேசியில் நில நடுக்கம் பற்றி செய்தியறிவிப்பு வேண்டுகோளை ஏற்று கொண்டார். பத்து நிமிடத்திற்கு பின் சீன வானொலி நிலையத்தின் சார்பில் நில நடுக்கம் பற்றி அவர் அளித்த செய்தியை சன்நியூஸ் தொலைக் காட்சி பதிவு செய்தது. அன்றிரவு தொலைக் காட்சி மூலம் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்தி தமிழகத்தில் பரவியது. பல நேயர்கள் அடுத்த நாள் காலை தொலை பேசி மூலம் அது பற்றிய தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தமிழ்ப் பிரிவிக்கு அறிவித்தனார்.
........ இவ்வாறு சீனாவில் நிகழ்ந்த நில நடுக்கம் பற்றி சன்நியூஸ் தொலைக் காட்சி முதன்முதலாக தமிழ்ப் பிரிவின் உதவி மூலம் இந்தியாவில் செய்தி அறிவித்தது. இது சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பாகும். இது தொடர்ந்து விரிவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.
6. வானொலி மற்றும் தொலைக் காட்சி மூலம் நாள்
முழுவதும் மக்களுக்கு பேரிடர் நீக்கப் பணி பற்றி எல்லா நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அங்கே நிகழ்ந்த விடயங்கள் உடனே தொலைக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் உண்மையை அறிந்து கொள்வதற்கு துணை புரிந்துள்ளது. அல்லவா?
ஆமாம். வானொலி தொலைகாட்சி மூலம் செய்திகள் அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் மக்கள் அனைவரும் அணித்திரட்டப்பட்டனர். பேரிடர் நீக்கத்திற்கு உதவி வழங்கும் நடவடிக்கை நாடு முழுவதும் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், மாநில அரசுகள், பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ள பணியாளர்கள், மாணவர்கள் முதியோர்கள், ஆகியோர் அனைவரும் உதவித் தொகை வழங்கியுள்ளனர். இரத்ததானம் செய்தனர். குடிநீர், உணவுப் பொருட்கள், கூடாரங்கள், இடிந்த வீடுகளிலிருந்து மக்கள் காப்பாற்றுவதற்கு தேவையான இயந்திரங்கள் மருந்துகள் உள்ளிட மீட்புதவி பொருட்கள் விமானங்கள், தொடர் வண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1000க்கு மேற்பட்ட கோடி யுவான் நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.
7. சீனாவில் மக்களின் நிலநடுக்க இழப்பை நீக்கும் பணியில்
கலந்து கொள்வது பற்றி எங்கள் நேயர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளளர்?
இது பற்றி நமது நேயர்கள் எங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். பலர் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். முதலில் பாண்டிசேரி என் பாலகுமார் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
8.........மே 12ம் நாள் முதல் 18ம் நாள் வரை மொத்தம் எத்தனை பேர் இடிப்பாடுகளிலிருந்து காபாற்றப்பட்டுள்ளனர்?
சிச்சுவான் வென்சுவான் நில நடுக்கத்தின் அளவு தொடக்கத்தில் அறிவித்த அளவு ரிச்டர் அளவையில் 7.8 ஆக பதிவானது. இப்போது நில நடுக்கம் ஆய்வகத்தை சேர்ந்த நிபுணர்களின் மதிப்பீட்டின் படி இந்த நில நடுக்கத்தின் அளவு ரிச்டர் அளவையில் 8 என்ற பதிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித குலம் முன்கண்டிராத கடுமையான அளவில் மாபெகு சீர்குலைவை ஏற்படுத்தும் இந்த நில நடுக்கத்தின் போது சீன மக்கள் பயப்படாமல் துணிவுடன் போராடியுள்ளனர். அதேவேளையில் உலகின் பல்வேறு நாடுகளும் அரசுகளும் மக்களும் வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் உதவிக்கரம் நீட்டி சீன மக்களுக்கும் சகநாட்டவருக்கும் உதவி வழங்கியுள்ளனர். ஜப்பானின் மீட்புதவி அணியை சேர்ந்த 31 பேர் முதலில் சீனா வந்தடைந்த வெளிநாட்டு மீட்புதவியாளர்களாவர். தொடர்ந்து ரஷியா தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் மீட்புதவி பணியாளர்கள் சீனாவுக்கு உதவும் வகையில் அடுத்தடுத்து சிச்சுவானின் நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு சென்று மீட்புதவி பணியில் பங்கெடுத்துள்ளனர்.
9....நிலநடுக்கம் மனித குலத்தை சீர்க்குலைக்கலாம். ஆனால் மக்களின் ஒற்றுமையை எந்த சக்திகளாலும் சீர்குலைக்க முடியாது என்று தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூறி மீட்புப்பணிகளை ஊக்கமூட்டினார் அல்லவா?
...ஆமாம். இப்போது சீனாவில் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன் உலக மக்களின் இதயத்துடன் இணைந்துள்ளனர். நில நடுக்கத்தை எதிர்நோக்கும் போது சீன அரசு தாமதமின்றி மீட்புதவி நடவடிக்கை மேற்கொண்டு ஒரு இலட்சத்திற்கு மேலான படையினரை நிலநடுக்கம் நிகழ்ந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ், தலைமை அமைச்ச்ர் வென்சியாபாவ், சீன அரசின் மற்ற தலைவர்கள் மாநில தலைவர்கள், நீர் சேமிப்பு மற்றும் நிலவியல் துறை நிபுணர்கள் முதலியோர் நில நடுக்கம் நிகழ்ந்த இடங்களில் மக்களுடன் பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் பங்கெடுத்துள்ளார்கள்.
......கடுமையான நில நடுக்கம் சீன மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் சீன மக்கள் கடுமையான இழப்பை எதிர்நோக்கிய போதும் ஒன்றுபட்டு போராடி கொண்டிருக்கிறார்கள்.
.....ஆமாம். மக்களின் துணிவின் முன்னால் இழப்புகள் சிறு சிறு துளிதான். நாடு முழுவதிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு சீர்குலைக்கப்பட்ட தாயகத்தை மீட்க பாடுபடுவது உறுதி.
.....நேயர்களே. இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.
|