• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 17:55:50    
சிறைக்கு திரும்பிய குற்றவாளி

cri
சிறைக்கு திரும்பிய குற்றவாளி

சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளிகள் பல்லாண்டுகள் கடந்தபின் மாட்டிக்கொண்ட நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவ்வாறு தப்பியோடிய குற்றவாளி பல ஆண்டுகளுக்கு பின்னர் தானாகவே சிறை திரும்பி தண்டனையை விரும்பி ஏற்றார் என்று கேள்விப்படுவது அரிது. தப்பியோடிய குற்றவாளி ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தானாகவே சரணடைந்த நிகழ்ச்சி Guangxi Zhuang தன்னாட்சி பிரதேசத்தின் Liuzhou வில் நடைபெற்றுள்ளது. ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்ற Feng Junqiang சிறைவாசத்தின் போதான கடினமான வாழ்க்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் 1985 ஆம் ஆண்டு தப்பியோடினார். சிறைச்சாலையில் உள்ள நிலைமைகள் மேலதிக மேம்பாடுகள் பெற்றுள்ளதை அறிந்த Feng, 22 ஆண்டுகளுக்கு பின்னர் தானாகவே சரணடைந்து சிறை வாழ்வை தொடர்கிறார். தற்போது சிறையில் தனது பணிகளை முடித்த பின்னர் பேரங்காடி, பேச்சுப்போட்டிகள், சதுரங்கம் மற்றும் கூடைபந்தாட்டப் போட்டிகளில் Feng கலந்து கொள்ள முடிகிறது. தப்பியோடிய குற்றவாளிகளில் தானாகவே சிறை திரும்பிய முதல் நபராக இவர் எண்ணப்படுகிறார்.

உறுப்புமாற்று அறுவை சிகிச்சை துறையில் சாதனை

உறுப்புமாற்று அறுவை சிகிச்சை துறையிலான வெற்றிகள் தற்போது வளர்ந்து வருகின்றன. நவீன உலகில் இத்தகைய முயற்சிகள் உயிர் கொடுக்கும் உன்னத செயல்களாக போற்றப்படுகின்றன. அத்தகைய உறுப்புமாற்று அறுவை சிகிச்சை, ஒன்று செய்வதே பெரிய விடயமாக இருக்கும் போது மேரிலெண்டிலுள்ள ஜாண் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஆறு பேருக்கு தொடர்ச்சியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேலான மருத்துவர் குழு ஒன்று இதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. புதிய சிறுநீரகத்தை பெற்றோள்ளோருக்கு 20 ஆண்டுகாலத்திற்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக அமெரிக்காவில் பலமுறை நடைபெற்றுள்ளதோடு, 2006 ஆம் ஆண்டு ஐந்து பேருக்கு இத்தகைய தொடர்ச்சியான அறுவை சிக்ச்சை செய்யப்பட்டது. மேரிலெண்டிலான இந்த அறுவை சிகிச்சை தான் உலகளவில் முதல்முறையாக அதிகமான பேருக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாகும்.