• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 08:56:02    
ஹுனான் மாநிலத்தின் சுற்றுலாத்துறை

cri
இவ்வாண்டின் துவக்கத்தில் சீனாவின் வரலாற்றில் அரிதாகக் கண்ட பனிப்பேரழிவு நிகழ்ந்ததால், ஹுனான் மாநிலத்தின் பொருளாதாரத்தில் மாபெரும் இழப்பு ஏற்பட்டது. உள்ளூரின் சுற்றுலாத் துறை, கடுமையாக பாதிக்கப்பட்டது. முழுமையாகாத புள்ளிவிபரங்களின் படி, ஹுனான் மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் நேரடி பொருளாதார இழப்பு, சுமார் 60 கோடி யுவானை எட்டியது என்று தெரிகிறது.

இப்பொழுது, ஹுனானின் சுற்றுலாத் துறை எப்படியுள்ளது என்பதை, இன்றைய நிகழ்ச்சியில் கூறுகின்றோம்.
இவ்வாண்டின் துவக்கத்தில் கடும் பனிப் பேரழிவு நிகழ்ந்த பின், சாலைகள், நீர் மற்றும் மின்சார வசதிகள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டதால், ஹுனான் மாநிலத்தின் இயற்கைக் காட்சி இடங்கள் பல, தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்தன. பனிப் பேரழிவு காலநிலையினால், இயற்கைக் காட்சி இடங்களிலுள்ள மரங்கள், பொதுவாக பாதிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான காடுகள், அழிந்தன.

உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் கடுமையாக சீர்குலைக்கப்பட்டது.
காட்டுப் பிரதேசத்தின் இயற்கைக் காட்சியை மீட்க, ஹுனான் மாநிலத்தின் சுற்றுலா வாரியங்கள், ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு வழிமுறைகள் மூலம், மரங்களை நட்டு வருகின்றன. அதே வேளை, நடுவண் அரசு, ஹுனான் மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு உதவி செய்ய, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜனவரி திங்கள் இறுதி முதல், சீனத் தேசிய

சுற்றுலா ஆணையம், அடுத்தடுத்து 39 லட்சம் யுவானை சிறப்பு மீட்புதவித்தொகையாக ஒதுக்கீடு செய்துள்ளது. ஹுனான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட இயற்கைக் காட்சி இடங்களில், இயற்கைக் காட்சியை மீட்கும் பணியிலும், சாலை, சுற்றுலா இடங்களுக்கு வழிக்காட்டும் பலகை, கழிவறை வசதி, பயணிகளுக்கான சேவை மையம் ஆகியவற்றைச் செப்பனிடுவதிலும், இத்தொகை பயன்படுத்தப்பட்டது. பல்வேறு முயற்சிகள் மூலம், ஹுனானின் சுற்றுலாத்துறையில், மறுமலர்ச்சி போக்கு ஏற்பட்டது என்று ஹுனான் மாநிலத்தின்

சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் லீயு ச்சி மிங் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
பனிப் பேரழிவுக்குப் பின், ஹுனானின் மலைகளும் ஏரிகளும் வசந்தக்காற்றுடன், மேலும் அழகான காட்சிகளையும், நல்ல சேவையையும் கொண்டு, பயணிகளை மனநிறைவு செய்ய பாடுபடும் என்றார் அவர்.
இவ்வாண்டு பிப்ரவரி திங்கள், ஹுனான் மாநிலத்தில் புகழ்பெற்ற இயற்கைக் காட்சி இடமான சாங் சியாசியே தேசிய காட்டுப் பூங்காவில், ஒலிம்பிக் சுற்றுலா என்ற

நடவடிக்கை நடைபெற்றது. இந்நடவடிக்கையை வாய்ப்பாக கொண்டு, பனிப் பேரழிவுக்குப் பின், ஹுனானின் சுற்றுலாச் சந்தையை முழுமையாக துவக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், கவலையின்றி ஹுனானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று, ஹுனான் மாநிலம், முழு உலக நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தது.