• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 09:00:42    
வெளிநாட்டு துறையினரின் அஞ்சலி

cri
மே 19,20,21 ஆகிய மூன்று நாட்கள், சீனா முழுவதும் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தும் நாட்களாகும். சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அரசியல் தலைவர்கள், சீனத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்பு சீன நிரந்தர அலுவலகங்களுக்குச் சென்று, சிச்சுவானின் Wenchuan நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று பிற்பகல் 4 மணி வரை, ஐ.நாவிலுள்ள 100க்கு மேலான நாடுகளின் தூதர்களும் பிரதிநிதகளும், ஐ.நாவில் சீன நிரந்தர பிரதிநிதி குழுவின் அலுவலகத்திற்குச் சென்று, அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஐ.நா பொது செயாலாளர் Ban Ki Moon 19ம் நாள் காலையில், ஐ.நாவிலுள்ள சீன தூதர் குழுவின் அலுவலகத்திற்குச் சென்று, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளும், அதன் பல்வேறு நாட்டு தூதாண்மை அதிகாரிகளும், நேற்று ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள சீன தூதர் குழுவின் அலுவலகத்திற்குச் சென்று, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்,
தவிர, ரஷ்யா, நியூசிலாந்து, மியன்மார், துர்க்மேனிஸ்தான், ஈரான், துருக்கி முதலிய நாடுகளின் அரசியல் தலைவர்களும், நேற்று சீன தூதரகங்களுக்குச் சென்று, அஞ்சலி செலுத்தி, ஆறுதல் தெரிவித்தனர்.