மத்திய நிதிய வரைவு திட்டத்தில் மாற்றங்கள்
cri
இவ்வாண்டு மத்திய நிதியத்தின் வரைவு திட்டத்தில், சி ச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தின் பேரிடர் நீக்கப் பணித் தேவைக்கிணங்க உகந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் வூ பாங்கோ இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். பேரிடர் நீக்கப் பணியின் நடைமுறை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இயற்கை சீற்றத்துக்குப் பிந்திய மறுசீரமைப்பு நிதியத்தை உருவாக்க, 10320 கோடி யுவான் மதிப்புள்ள மத்திய வரைவு சரிப்படுத்தல் நிதியைப் பயன்படுத்துவதற்கு தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|