• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 18:33:22    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசஙகளில் சந்தை ஒழுங்கு

cri
தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் சந்தையை நிதானப்படுத்துவதிலும், புழக்க ஒழுங்கை மீட்பதிலும் வணிக வாரியங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்று முற்பகல் வரை, சி ச்சுவான், கான் சூ, ஷான் சி ஆகிய 3 மாநிலங்களில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் விற்பனை செயல்பாட்டை மீட்கப்பட்டுள்ளன. சீன வணிக அமைச்சர் சென் தெ மிங் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதை தெரிவித்தார்.
நீர், வசதியான உணவுப் பொருட்கள், அவசர மீட்புதவி கருவிகள், விளக்குகள் உள்ளிட்ட மீட்புதவிப் பொருட்களின் விநியோக மற்றும் ஏற்றியிறக்கல் பணியை செவ்வனே மேற்கொள்ள வணிக அமைச்சகம் பாடுபட்டு வருகின்றது. மிகவும் அவசியமான பொருட்களை கிராமப்புறங்களுக்கும் மிகவும் இன்னலுக்குள்ளான மக்களுக்கும் அனுப்புவது என்பது தற்போதைய பணியின் முக்கியப் பகுதியாகும் என்று சென் தெ மிங் கூறினார்.