சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தால், கடுமையான உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்பட்டது. உயிரிழந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இடிந்த வீடுகள் ஆகியவற்றை எதிர்நோக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்மறையான எண்ணங்களும் உணர்வுகளும் ஏற்படும். அவர்களுக்கு உளநல உதவி வழங்கும் வகையில், சீனச் சுகாதார வாரியங்கள், பல்வேறு இடங்களின் அரசுகள், பல அரசு சாரா அமைப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உள நல உதவிப்பணியாளர்களை அனுப்பியுள்ளன. நவ சீனா நிறுவப்பட்ட பின் மிகப் பெருமளவிலான உள நல உதவி நடவடிக்கை இப்பிரதேசங்களில் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.
பெய்ச்சுவான் மாவட்டத்திலான பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் ஒரு இடத்தில், பெய்ச்சுவான் இளையோர் இடை நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் லியு காய், தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து விறுவிறுப்பாக குடியமர்த்தும் பணியில் ஈடுபடுகின்றார். ஆனால், அவர் இந்த இடத்துக்கு வந்த போது, இத்தகைய அமைதியான உணர்வு அவரிடம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் இடத்தில் உள நல உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர் சுன் ச்சியாங் கூறியதாவது
லியு காய் இங்கு வந்த போது, பீதியும் அச்சமும் கொணடிருந்தார்.எளிதில் அவரால் உறங்க முடியவில்லை. உணர்வற்ற முகம் கொண்டவராய் அவர் கலக்கமடைந்து காணப்பட்டார் என்று அவர் கூறினார்.
உள நல உதவிப் பணியாளரின் வழிகாட்டல் மூலம், நிலநடுக்கத்தின் தான் அனுபவித்தவை பற்றி லியு காய் சுன் ச்சியாங்கிடம் பேசினார். அவருடைய உணர்ச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில், தொண்டர்களுடன் இயன்ற உதவிப்பணியில் ஈடுபடுமாறு சுன் ச்சியாங் அவரை ஊக்குவித்தார். தற்போது, லியு காயின் உணர்வுகள் தெளிவடைந்து அவர் நல்ல மனநிலையுடன் காணப்படுகிறார்.
வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ததும், உள நல உதவிப்பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. சுகாதார வாரியங்களும் படைப் பிரிவுகளும் மிக முன்னதாக அனுப்பிய மீட்புதவிக் குழுக்களில், சிறப்பு உள நல உதவிப்பணியாளர்கள் இடம்பெற்றனர். உயிர்த் தப்பி பிழைப்போரைக் காப்பாற்றி, மருத்துவச் சிகிச்சை அளிக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை சீராக்க, உளநல ஆற்றுப்படுத்தல் வழங்கப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பறகான 2ம் நாளில், சீன மக்கள் விடுதலைப் படையின் 3வது இராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளநல அறிவியலாளர் பெங் செங்செய் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தார். எமது செயதியாளரிடம் தன் பணி பற்றி விளக்கிய போது, அவர் கூறியதாவது
இடிபாடுகளில் சிக்கியிருந்தோரைக் காப்பாற்றும் போதே, உள நல உதவிப்பணி துவங்கியது. உயிர் வாழ்வின் மீதான அவர்களது விருப்பத்தைத் தீவிரமாக்கி, மீட்புதவிப் பணியாளர்கள் அவர்களைக் காப்பாற்றுவது உறுதி என்பதில் அவர்கள் முழு நம்பிக்கை கொள்ளவைப்பது, அப்போதைய உள நல உதவிப்பணியின் முக்கிய இலக்காகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள நல உதவிப் பணி மேற்கொள்வதில், நாம் அவர்களது வீடுகளுச் சென்று, அவர்களுடன் உரையாடி, அவர்கள் தங்களது உள்ளத்தின் ஆழந்த்திலுள்ள பயங்களை வெளிப்படுத்த பாடுபடுகிறோம். இந்த வழிமுறையில் மிகவும் தெளிவான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று பெங் செங்செய் தெரிவித்தார்.
முழுமைபெறாத புள்ளிவிபரங்களின் படி, இது வரை குறைந்தது 50 உளநல உதவிப் பணிக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தவிரவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு உள நல உதவி வழங்கும் வகையில், தொடர்புடைய வாரியங்களும் சில வானொலி நிலையங்களும் உள நல உதவிக்கான உடனடித் தொலை பேசி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உளநல உதவிப் பணியாளர்கள் உளநலம் தொடர்புடைய தகவல்களை வழங்கி, தங்களது உளநலத்தை பேணுவதற்கு வழிகாட்டினர். நிலநடுக்கம் நிகழ்ந்ததற்கு பிந்தைய தற்காப்பு உளநல உதவி பற்றிய நூல் ஒன்று வெளியிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினர், உயிர் தப்பி பிழைத்தோர், குழந்தைகள் ஆகியோரை தவிர்த்து, தொண்டர்கள், படையின் இராணுவவீரர்கள், மருத்துவஊழியர்கள் முதலியோரும் உளநல உதவியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு 7 நாள் முதல் 3 திங்கள் வரையிலான காலத்தில, மக்கள் பேரிடர் பற்றி அவ்வப்போது எண்ணி வருந்துவர். இதன் விளைவாக, பயம், நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணம் போன்ற எதிர்மறையான எண்ணங்களும் செயல்களும் எளிதில் ஏற்பட வாய்புபுண்டு. ஆகவே, தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உளநல உதவிக்கான நிபுணர்களும் தொண்டர்களும் அதிகமாக தேவைப்படுகின்றனர் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
|