துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்திய நாட்கள், பொது மக்களின் இறந்தோருக்கு அளித்த மதிப்பை வெளிக்காட்டியது என்று சிங்குவா செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட கட்டுரை தெரிவித்தது.
2008ம் ஆண்டு மே திங்கள் 19 முதல், 21ம் நாள் வரை, 130 கோடி சீன மக்களும், மனித வரலாற்றில் மாபெருமளவில், சி ச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்று இக்கட்டுரை தெரிவித்தது.
3 நாள் நீடித்த நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தோருக்கு நாம் வழங்கும் மிக உயர்வான மதிப்பாகும் என்று தலைவர்களும் மக்களும், முழு நம்பிக்கை கொள்கின்றனர். சீனா, உயிருக்கு மதிப்பு அளிப்பதையும், பொது மக்களில் அக்கறை காட்டுவதையும் இது உலகத்துக்கு வெளிக்காட்டியது என்று இக்கட்டுரை தெரிவித்தது.
|