21, 22ம் நாட்களில், பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், அந்தந்த நாட்டிலுள்ள சீனத் தூதரகத்துக்கு சென்று, சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கியூப அரசவைத் தலைவர் Castro நேற்று கியூபாவிலுள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினர், சீன மக்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு ஆகியவற்றுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
நைஜீரிய அரசுத் தலைவர் Yar`aduaயும் அவரது மனைவியும், நேற்று நைஜீரியாவிலுள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன், சீனாவின் பேரிடர் நீக்கப் பணிகளுக்கு நைஜீரியா 20 இலட்சம் அமெரிக்க டாலரை வழங்கும் என்று Yaradua அறிவித்தார்.
தவிர, பிலிப்பைன்ஸ் செனெட் அவையின் தலைவர், ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர், ஹங்கேரி தலைமை அமைச்சர், பிரேசில் துணை அரசுத் தலைவர் ஆகியோர் அந்தந்த நாட்டிலுள்ள சீனத் தூதரகத்துக்கு சென்று, சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
|