சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், வெளிநாடு வாழ் சீனர்கள், சீன முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களின் பணியாளர்கள், வெளிநாடுகளிலுள்ள சீன மாணவர்கள் ஆகியோர் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தொடர்ந்து உதவித்தொகையையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச நண்பர்களின் ஆதரவையும் உதவியையும் பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கூடாரங்கள் தேவைப்படுவதை அறிந்த பின், வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களும் துணை நிலைத் தூதரகங்களும் உதவித்தொகையை பயன்படுத்தி, கூடாரங்களை வாங்கின.
பின்லாந்து, ஹங்கேரி முதலிய நாடுகளில் வாழும் சீனர்கள், சீன முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சீன மாணவர்கள் ஆகியோர் அந்தந்த நாட்டிலுள்ள சீனத் தூதரகத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவித்தொகையையும் பொருட்களையும் வழங்கினர்.
|