சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பரப்பளவு ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டரை எட்டியது. சீனத் துணை தேசிய நில வள அமைச்சர் Yun Xiaosu இன்று பெய்சிங்கில் நடைபெற்ற அரசவை செய்திப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
சிச்சுவான், கான் சு, ஷான் சி ஆகியவற்றில், நிலச்சரிவு, மண் அரிப்பு முதலிய நிலவியல் சீற்றங்கள் எளிதில் ஏற்பட்டன என்று Yun Xiaoshu கூறினார்.
நிலவியல் சீற்றத்தின் கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளும் வகையில், சீனத் தேசிய நில வள அமைச்சகம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுமார் 800 நிபுணர்களையும் தொழில் நுட்ப வல்லுனர்களையும் அனுப்பியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களை குடியமர்த்தும் பணி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு அவர்கள் சேவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
|